சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவள்ளுவருக்கு காவி வண்ண உடை.. சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக.. கடும் கொந்தளிப்பு!

தமிழக பாஜக கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி தாய்லாந்தில் 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.அங்கு இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றாார்.

அந்த விழாவில் திருக்குறளின் 'தாய்' மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட்டார். இது பெரிய வரவேற்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்.. உலக நாடுகள் வரவேற்றது.. பாங்காக்கில் பிரதமர் மோடி பேச்சு!காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்.. உலக நாடுகள் வரவேற்றது.. பாங்காக்கில் பிரதமர் மோடி பேச்சு!

பாஜக

ஆனால் தமிழக பாஜக கட்சியின் இது தொடர்பாக செய்தி டிவிட் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?, என்று பாஜக டிவிட் செய்து இருந்தது.

என்ன சீண்டல்

என்ன சீண்டல்

அதோடு, அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது. பாஜகவின் இந்த டிவிட் பெரிய சர்ச்சையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

காவி உடை

காவி உடை

இந்த புகைப்படத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. திருவள்ளுவர் இத்தனை வருடங்கள் வெள்ளை உடையில் மட்டும்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழக பாஜக கட்சியின் கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நெட்டிசன்கள் கோபம்

நெட்டிசன்கள் கோபம்

இதற்கு எதிராக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக திருவள்ளுவரை அவமானப்படுத்திவிட்டது. அவருக்கும் கூட மத சாயம் பூசிவிட்டது என்று குறிப்பிட்டு பலர் இணையத்தில் தமிழக பாஜகவிற்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள்.

English summary
Tamilnadu BJP puts Saffron dress to Thiruvalluvar: Twitter erupts against it loudly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X