சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொந்த ஊர்னா சும்மாவா.. சேலம் மீது தனிபாசம்.. மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக அரசு!

சேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu Budget 2020| முதல்வரின் சொந்த ஊருக்கு எத்தனை திட்டங்கள் தெரியுமா ?

    சென்னை: சேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இன்று காலை துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 10வது முறையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த பட்ஜெட் அறிவிப்பில், சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்கு ரூ.6448 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் ரூ.6448 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு!ரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு!

    எப்படி திட்டம்

    எப்படி திட்டம்

    நகர்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.5,306 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி கங்கைகொண்டானில் 77.94 கோடி ரூபாயில் உணவு பூங்கா அமைக்கப்படும். 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும். தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சேலம், கடலூர், விழுப்புரம், மதுரையில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் தென் மாவட்டங்களில் வேளாண்மை மேம்படுத்தப்படும். வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிகள் அதிகரிக்கப்படும்.

    சேலம் ஏன்

    சேலம் ஏன்

    சேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேலத்தில் புத்தராகவுண்டம்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் சிப்காட் கொண்டு வரப்படும். சேலம் மக்களை இந்த அறிவிப்பு அதிக சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த சிப்காட் மூலம் சேலம் வேகமாக முன்னேறும். விரைவில் கோவையை சேலம் மிஞ்ச வாய்ப்புள்ளது.

    எவ்வளவு திட்டம்

    எவ்வளவு திட்டம்

    கடந்த மூன்று வருடங்களாக தமிழக அரசு சேலம் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சேலத்தில் தமிழகத்தின் நீளமான டபுள் டக்கர் பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆசியாவின் பெரிய கால்நடை பூங்கா கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரிய டபுள் டக்கர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னணி காரணம்

    பின்னணி காரணம்

    தமிழக முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர். இதனால் சொந்த ஊர் மீது அதிக பாசம் கொண்டு இது போன்ற அறிவிப்புகளை அரசு சார்பாக அவர் வெளியிட்டு வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் சேலத்தில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் தனது சொந்த ஊரில் அதிமுக புகழை நிலை நிறுத்த வேண்டும் என்று, முதல்வர் தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

    English summary
    Tamilnadu Budget 2020: Salem will get Two new Sipcot soon says AIADMK Government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X