சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடி.. ஒரே ஆண்டில் ரூ.60000 கோடி கடன் அதிகரிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Budget 2020-2021| ஒரே ஆண்டில் தமிழகத்தின் கடன் ரூ.60000 கோடி அதிகரிப்பு

    சென்னை: 2020 -21ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் என நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

    2020 -21ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார், பட்ஜெட் உரையில் 2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் என அறிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த 2019 - 20-ம் நிதியாண்டில் 3,97,495 கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன் தொகை 2020 - 21 ஆம் நிதியாண்டில் ரூ.4,56,660 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே நிதியாண்டில் சுமார் ரூ. 60000 கோடி கடன் தமிழகத்திற்கு அதிகரித்துள்ளது.

     ரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு! ரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு!

    28,685 கோடி ரூபாய்

    28,685 கோடி ரூபாய்

    கருணாநிதி முதல்வராக இருந்து விலகிய 2000 - 01-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 28,685 கோடி ரூபாய் ஆக இருந்தது. இது ஜெயலலிதா ஆட்சியில் இருந்து விலகிய 2006-ம் ஆண்டு 57,457 கோடியாக அதிகரித்தது. பின்னர், 2011-ம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் தருவாயில் தமிழக அரசின் கடன் 101439 கோடியாக உயர்ந்தது.

     2,52,431 கோடி கடன்

    2,52,431 கோடி கடன்

    அதன்பின்னர் ஜெயலலிதா முதல்வரானார். அவரது ஆட்சியில் 2012-13-ம் நிதியாண்டில் 1,20,204 கோடியாக கடன் இருந்தது. 2013-14-ம் நிதியாண்டில் அது 1,40,041 கோடியாக உயர்ந்தது. 2014-15-ம் நிதியாண்டில் 1,95,290 கோடியாக தமிழகத்தின் கடன்சுமை உயர்ந்தது. 2015-16-ம் நிதியாண்டில் 2,11,483 கோடியாகவும் 2016 -17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு 2,52,431 கோடி ரூபாயாக உயர்ந்தது.

    2018ல் எவ்வளவு கடன்

    2018ல் எவ்வளவு கடன்

    ஆனால் 2017 - 18-ம் நிதியாண்டில் 3 லட்சத்து 14,366 கோடி ரூபாயாக தமிழக அரசின் கடன் தொகை அதிகரித்தது. அதாவது ஒரே ஆண்டில் சுமார் 62 ஆயிரம் கோடி கடன் தமிழகத்திற்கு அதிகரித்தது. 2018 - 19 ஆம் நிதியாண்டில் 3,55,844 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதன்படி கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு தமிழக அரசின் கடன் தொகை ஒரு ஆண்டில் மட்டும் 31 ஆயிரம் கோடி அதிகரித்தது.

     ஒவ்வொருவரின் தலையில் ரூ.57500

    ஒவ்வொருவரின் தலையில் ரூ.57500

    இந்நிலையில் தமிழக அரசுக்கு கடந்த 2019 - 20-ம் நிதியாண்டில் 3,97,495 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது 2020 - 21 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு ரூ.4,56,660 கோடி ஆக உயர்ந்திருப்பதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நிதியாண்டில் சுமார் ரூ. 60000 கோடி கடன் தமிழகத்திற்கு அதிகரித்துள்ளது. அதாவது தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையில் 45000 ஆக இருந்த கடன் தொகை இப்போது சுமார் 57500 ஆக (மக்கள் தொகை 8 கோடி) உயர்ந்துள்ளது.

    English summary
    tn govt loan apporaxmetly ரூ.4,56,660 crore on 2020 - 21 financial year: says o paneerselvam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X