சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக அமோக முன்னிலை- திமுக, காங்.வேட்பாளர்கள் பின்னடைவு

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் பின்னடவை எதிர்கொண்டுள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்த ராதாமணி காலமானதால் அத்தொகுதிக்கு கடந்த 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுகவின் புகழேந்தி, அதிமுகவின் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர்.,

    நாங்குநேரியில் காங்.பின்னடைவு.. அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலைநாங்குநேரியில் காங்.பின்னடைவு.. அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலை

    நாங்குநேரி தொகுதி

    நாங்குநேரி தொகுதி

    இத்தொகுதியில் 84.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானதால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    யார் யார் வேட்பாளர்கள்?

    யார் யார் வேட்பாளர்கள்?

    இதில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகர், அதிமுகவின் நாராயணன் ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இத்தொகுதியில் 66% வாக்குகள் பதிவாகி இருந்தன.

    பெரும் எதிர்பார்ப்பு

    பெரும் எதிர்பார்ப்பு

    லோக்சபா தேர்தலுக்குப் பிந்தைய சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் என்பதால் இந்த இரு தொகுதிகளின் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இன்று காலை வாக்கு எண்ணிக்கையே தாமதமானதால் கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன.

    தொடக்கம் முதலே அதிமுக முன்னிலை

    தொடக்கம் முதலே அதிமுக முன்னிலை

    நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இரு தொகுதிகளிலுமே அதிமுக வேட்பாளர்கள் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகின்றனர். நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட சுமார் 2000க்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

    விக்கிரவாண்டியில் அதிமுக

    விக்கிரவாண்டியில் அதிமுக

    இதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தியை விட சுமார் 2,000 வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார். இரு தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்திருப்பது அக்கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

    அதிமுக உற்சாகம்

    அதிமுக உற்சாகம்

    அதேநேரத்தில் ஆளும் அதிமுகவுக்கு மிகப் பெரும் உற்சாகத்தை தேர்தல் முடிவுகள் தந்து கொண்டிருக்கின்றன. லோக்சபா தேர்தலில் படுதோல்வியை அதிமுக சந்தித்து. அதனைத் தொடர்ந்து வேலூர் லோக்சபா தொகுதியிலும் அதிமுக தோல்வியை எதிர்கொண்டது. அதன் பின்னர் 12 தொகுதி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆறுதல் வெற்றியை பெற்றது அதிமுக.

    கொண்டாட்டத்தில் அதிமுக

    கொண்டாட்டத்தில் அதிமுக

    தற்போது 2 தொகுதி இடைத்தேர்தல்களில் முழு வெற்றியை நோக்கி பயணிப்பது அதிமுக தொண்டர்களை கொண்டாட வைத்திருக்கிறது. அதிமுகவினர் இரு தொகுதிகளிலும் கொண்ட்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    English summary
    Nanguneri and Vikravandi by Elections votes counting commence from 8 am on Thursday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X