சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசு கேபிள் டி.வி மாத சந்தா குறைப்பு.. முதல்வர் பழனிச்சாமி அதிரடி.. இனி எவ்வளவு தெரியுமா?

தமிழக அரசு கேபிள் டி.வியின் மாத சந்தா கட்டணத்தை குறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு கேபிள் டி.வியின். மாத சந்தா கட்டணத்தை குறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

தமிழக அரசு கேபிள் டிவி தற்போது தமிழ்நாடு முழுக்க வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதிலும் செட் ஆப் பாக்ஸ் முறை கொண்டு வரப்பட்ட பின் தமிழக அரசு கேபிள் புதிய பரிணாமத்தை அடைந்து உள்ளது. ஆனாலும் தமிழக அரசு கேபிள் கட்டணம் அதிகம் இருப்பதாக புகார் எழுந்து வந்தது.

Tamilnadu Cable Monthly charges decreased by CM Palanisamy

புதிதாக தமிழகம் முழுக்க மொத்தம் 36 லட்சம் செட் ஆப் பாக்ஸ்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் கட்டணம் மட்டும் குறைக்கப்படாமல் இருந்தது. மக்கள் தொடர்ந்து இது தொடர்பாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு கேபிள் டி.வி. மாத சந்தா கட்டணத்தை குறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அதன்படி தற்போது புதிய கட்டண முறைப்படி ரூ.130 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 10 முதல் இந்த புதிய சந்தா கட்டணம் குறைப்பு அமலுக்கு வரும்.வேலூர் மாவட்டம் நீங்கலாக ஆக.10 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும். அங்கு தேர்தல் காரணமாக இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வரவில்லை.

இதற்கு முன் கேபிள் கட்டணம் 220 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி என்று இருந்தது. தற்போது இதில் 90 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Cable Monthly charges decreased to 130 Rs + GST by CM Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X