சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செமஸ்டர் தேர்வு.. ஈரானில் தவிக்கும் மீனவர்கள்.. மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி 2 கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வு பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த 750 மீனவர்கள் ஈரானில் தற்போது சிக்கி தவித்தனர். இதில் குமரி மாவட்ட மீனவர்கள் மட்டும் 562 பேர் சிக்கி தவித்து வந்தனர். இவர்களை மீட்க அரசு சார்பாக கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 710 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.

Tamilnadu Chief Minister Edappadi Planisamy sends 2 letter to Central Ministers
Tamilnadu Chief Minister Edappadi Planisamy sends 2 letter to Central Ministers

ஆனால் கப்பலில் இடம் இல்லை என்று 40 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் அங்கிருந்து தமிழக மீனவர்கள் 40 பேர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு பின் குட்நியூஸ்.. 7 நாட்களாக சென்னையில் நடக்கும் மாற்றம்.. பயன் தரும் அரசின் திட்டம்ஒரு மாதத்திற்கு பின் குட்நியூஸ்.. 7 நாட்களாக சென்னையில் நடக்கும் மாற்றம்.. பயன் தரும் அரசின் திட்டம்

அதில், ஈரானில் சிக்கித் தவிக்கும் 40 தமிழக மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளேன, என்று முதல்வர் டிவிட் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் தனது இன்னொரு டிவிட்டில் கல்லூரிகள், விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியா சூழல் உள்ளது.

செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு மத்திய அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்கிரியால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன், என்று தமிழக முதல்வர் டிவிட் செய்துள்ளார்.

Tamilnadu Chief Minister Edappadi Planisamy sends 2 letter to Central Ministers

முன்னதாக கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும். கட்டாயம் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும், என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தற்போது தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியா சூழல் உள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது. அந்த கடிதத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் வழங்க வேண்டும்.

English summary
Iran TN fisherman issue and Semester issue: Tamilnadu Chief Minister Edappadi Planisamy sends 2 letter to Central Ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X