சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர் - ஆளுநர், முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வீட்டிலேயே களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபடுங்கள் என

Google Oneindia Tamil News

சென்னை: விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள் என்று முதல்வர் பழனிச்சாமி தனது விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Recommended Video

    விநாய சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடுங்கள்..ஊர்வலம் வேண்டாம் - தமிழக அரசு

    கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு அனுமதிக்கவில்லை. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் ஆறு, கடலில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலையை வைத்து வழிபடுவோம் என்று இந்து முன்னணி கூறியுள்ளது.

    Tamilnadu Chief Minister greets vinayagar chathurthi 2020

    இந்து முன்னணியின் நிலைப்பாட்டிற்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு வழிகாட்டுதல்படியே மத ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் தமிழக மக்களுக்கு சிறப்பான, வளமாக எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிரிந்தவரை ஒன்று சேர்க்கும் புன்னைமரத்தடி பிள்ளையார் - எந்த மரத்தடி பிள்ளையார் என்ன வரம் தருவார்பிரிந்தவரை ஒன்று சேர்க்கும் புன்னைமரத்தடி பிள்ளையார் - எந்த மரத்தடி பிள்ளையார் என்ன வரம் தருவார்

    முதல்வர் பழனிச்சாமி தனது வாழ்த்துச்செய்தியில், விநாயகரின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் ஆன சிலைகளை வைத்து வழிபடுவர். 'வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர்' என பதினோறாம் திருமுறையில் பாடப்பட்டுள்ளது. விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள் என்று முதல்வர் பழனிச்சாமி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

    இதன் மூலம் பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கிடையாது என்று உறுதியாக கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy has extend greeting the people of Tamil Nadu on the occasion of Ganesha Chaturthi. He said to keep and worship the Vinayagar made of clay at home.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X