சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகரிக்கும் கொரோனா.. முதல்வர் அவசர ஆலோசனை.. அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள போகிறார்

Google Oneindia Tamil News

சென்னை : தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மிரட்டி வரும் நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க‌.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது... ஆனால், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மக்கள் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றத் தவறிவிட்டதாக கூறப்படுகிறது..

அதிகரிக்கும் கொரோனா..ஆலோசிக்கும் முதல்வர் ஸ்டாலின் - லாக்டவுன் வருமா? அதிகரிக்கும் கொரோனா..ஆலோசிக்கும் முதல்வர் ஸ்டாலின் - லாக்டவுன் வருமா?

 மாஸ்க் மீண்டும்

மாஸ்க் மீண்டும்

அதனாலேயே, தொற்றின் எண்ணிக்கை மளமளவென்று உயரத் தொடங்கியது... அதனாலேயே மாஸ்க் அணிவது அவசியம் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது... மேலும், பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறையும் அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொற்று அதிகரித்து காணப்படுகிறது.. நேற்று ஒருநாள் மட்டும் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது...

 பழைய கொரோனா

பழைய கொரோனா

நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவது குறித்து டாக்டர்கள் சொல்லும்போது, தற்போதைய கொரோனாவிற்கும், முன்பு இருந்த கொரோனாவிற்கு வித்தியாசம் உள்ளது.. பழைய கொரோனா பாதிப்பின்போது மக்கள் அதிகம் உயிரிழந்தனர்... ஆனால், இப்போது இந்த தொற்று பெரிதாக உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை... கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சாதாரண பிரச்சனைகளே ஏற்படுகிறது.

 டாக்டர்கள் அட்வைஸ்

டாக்டர்கள் அட்வைஸ்

மருத்துவமனைகளில் கொரோனாவின் தீவிரத்தை தற்போது காண முடியவில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.. கொரோனாவால் ஊரடங்கு வருமா என்பதை, மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகள் வரும் கூட்டத்தை வைத்தே கணிக்க முடியும்.. எனினும், மக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மறுபடியும் லாக்டவுன் வருவதற்காக வாய்ப்புக்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 ஸ்டாலின் ஆலோசனை

ஸ்டாலின் ஆலோசனை

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றன.. இந்த ஆலோசனைக்குப் பிறகு ஏதாவது முடிவு எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனாவால் அதிமுக பொதுக்குழுவுக்கு சிக்கல்? - என்ன சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்?
    முதல்வர் அறிவுறுத்தல்

    முதல்வர் அறிவுறுத்தல்

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு பிற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாகவே உள்ளது என்றும், தொற்று பரவல் உச்சம் பெற்றுத் தான் குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த கருத்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியதாகவும், பாதிப்பு அதிகமானால் கோவிட் கேர் சென்டர்களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    English summary
    tamilnadu chief minister mk stalin is holding a meeting with officials today: coronavirus issue தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள போகிறார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X