சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீட்டுக்கே உணவு வரும்.. தொழிலாளர்களுக்கு கூடுதல் நிதி உதவி.. அரிசி, பருப்பு இலவசம்: எடப்பாடி அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருமையான பல அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அந்த அறிவிப்புகளின், அனைத்து முக்கிய அம்சங்களை இங்கே பாருங்கள்:

Tamilnadu CM announced corona relief financial aids
  • நேற்று 23ம் தேதி, தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த பல்வேறு அறிவிப்புகளை இந்த அவையில் வெளியிட்டேன். மேலும் அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இவைகள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது
  • இதனால் விவசாய கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை எளியவர்கள் பாதிப்பை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க 3,250 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்க ஆணையிடுகிறேன்
  • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்
  • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்
  • பொது வினியோக கடையில் கூட்டத்தை குறைக்க, டோக்கன் வழங்கி ஒரு குறிப்பிட்ட நேரம், நாள் கணக்கிட்டு பொருட்கள் வழங்கப்படும்
  • குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறி இருந்தால் ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்
  • கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கு சிறப்பு தொகுப்பாக தலா ஆயிரம் ரூபாயும், மற்றும் 17 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்
  • தற்போது தமிழகத்தில் சிக்கி தவிக்கும் பிற மாநில கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், கலெக்டர்கள் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் குடும்பமும் பலன் பெற, தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்
  • அம்மா உணவகங்கள் மூலமாக சூடான, சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும்
  • எந்த வசதியும் இல்லாத, ஆதரவற்றோர் போன்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு, சூடான, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படும். இதற்கென தேவைக்கு ஏற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்க சென்னை மாநகர ஆணையர் மற்றும் பிற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்
  • அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோருக்கு தேவையான உணவு அளிக்க, மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
  • பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது வினியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ், இந்த மாதத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கான ஊதியம் சிறப்பு ஊதியம் கூடுதலாக வழங்கப்படும்.

இவைதான் முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்.

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி: முதல்வர் அதிரடி உத்தரவுதமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி: முதல்வர் அதிரடி உத்தரவு

English summary
Tamilnadu ration card holders will get RS.1000 each, CM edappadi palanisamy announced and full detail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X