சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்மார்ட் மூவ்.. ஆப்பிள் உட்பட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம்.. முதலீட்டிற்கு அழைப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் ஆப்பிள் உள்ளூர் 13 தொழில்நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா லாக்டவுன் மே 31 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாவது லாக்டவுன் அறிவிப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதனால் இந்தியாவின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 2019-2020ம் ஆண்டுக்கான ஜிடிபி 4.2% ஆக இருக்கும் என்று மத்திய அரசின் புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்தலாம்.. திடீரென பின்வாங்கும் நேபாளம்.. இந்தியா கொடுத்த நெத்தியடி பதில்.. அதிரடி!பேச்சுவார்த்தை நடத்தலாம்.. திடீரென பின்வாங்கும் நேபாளம்.. இந்தியா கொடுத்த நெத்தியடி பதில்.. அதிரடி!

தமிழகம் பொருளாதாரம்

தமிழகம் பொருளாதாரம்

இன்னொரு பக்கம் தமிழகத்தின் பொருளாதாரமும் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இதனால் இயங்கவில்லை. அதேபோல் சென்னையில் மூன்று மாதங்களாக நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. இந்தியாவின் ஜிடிபியில் அதிக பங்கு வகிக்கும் இரண்டாவது பெரிய நகரம் சென்னை ஆகும். இதனால் சென்னையில் தொழிலாளர்கள் நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது.

தமிழக அரசு முடிவு

தமிழக அரசு முடிவு

இந்த நிலையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் புதிய நிறுவனங்களை தொடங்கலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கலாம் என்று முதல்வர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் .

செம அறிவிப்பு

செம அறிவிப்பு

அதன் ஒரு கட்டமாக ஆப்பிள் உள்ளூர் 13 தொழில்நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதன்படி ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி உள்ளிட்ட உலகின் முக்கிய நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும். தமிழகத்தில் நிறுவனங்களை தொடங்குங்கள் என்று அவர் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்

கடிதம்

தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து நிறுவனத் தலைவர்களுக்கு நேரடியாக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா காரணமாக சீனாவில் இருந்து நிறைய அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுகிறது. இந்த நிறுவனங்களை இந்தியா தன் பக்கம் இழுக்க பார்க்கிறது. இந்த நிலையில் இப்படி இந்தியா வரும் சீனாவை சேர்ந்த அமெரிக்க நிறுவனங்களை தமிழகத்திற்கு திருப்ப தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

English summary
Tamilnadu CM called 13 companies including Apple for investing in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X