சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா லாக்டவுன்: மருத்துவ வல்லுநர்களுடன் செப்.29-ல் முதல்வர் எடப்பாடி ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நிலவரம் தொடர்பாக வரும் 29-ந் தேதி மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5,57,999 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamilnadu CM Edappadi Palanisami to meet Medical experts on Sep 29

கொரோனாவுக்கு இதுவரை 9,010 பேர் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனாவின் பிடியில் இருந்து 5,02,740 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 46,249 பேர் மட்டுமே தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

தமிழகத்தில் அக். 1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி.. விருப்பத்தின் பேரில் மாணவர்கள் வரலாம்! அரசு அதிரடிதமிழகத்தில் அக். 1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி.. விருப்பத்தின் பேரில் மாணவர்கள் வரலாம்! அரசு அதிரடி

இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட 8-ம் கட்ட லாக்டவுன் இம்மாதம் 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன்தான் லாக்டவுன் அமலில் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம், லாக்டவுன் நிலைமை உள்ளிட்டவை குறித்து வரும் 29-ந் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் முடிவில் கொரோனா பரவலைத் தடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வெளியாகும்.

English summary
Tamilnadu Chief Minister Edappadi Palanisami will meet Medical experts on Sep 29.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X