சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெருமை பேசுகிறேனா?.. என்ன பேசுறீங்க நீங்க?.. நிருபரிடம் ஆவேசமடைந்த முதல்வர் பழனிச்சாமி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவர் பெருமை பேசுகிறீர்கள் என கூறியதால் அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாகவே பதிலளித்தார்.

கொரோனாவுக்கு மத்தியில் நீட் தேர்வு, அதன் முடிவுகள் என இருந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை பல்வேறு தடைகளை தாண்டி தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து மருத்துவ கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த இந்த கலந்தாய்வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

இன்று என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெகிழ்ச்சி இன்று என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெகிழ்ச்சி

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

அப்போது மருத்துவ கனவில் இருந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் பயில இடம் கிடைத்ததை அடுத்து பெற்றோரும் மாணவர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழக அரசு மாணவர்கள்

தமிழக அரசு மாணவர்கள்

அப்போது நீட் தேர்வு, மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முதல்வரிடம் கேட்கப்பட்டன. அப்போது நீட் தேர்வில் தமிழக அரசு மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு குறித்து முதல்வர் கூறும் போது நிருபர் ஒருவர் குறுக்கிட்டார்.

சரியான கேள்வி

சரியான கேள்வி

அவர் கூறுகையில் நீட் தேர்வுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு அளித்தது குறித்து தமிழக அரசு பெருமை பேசுகிறது என நிருபர் கூறியதை கேட்டு முதல்வருக்கு கோபம் ஏற்பட்டது. முதல்வர் அந்த நிருபரிடம், பெருமை என்ற வார்த்தையை சுட்டிக்காட்டி சரியான கேள்வியை கேட்க வேண்டும்.

தவறான வார்த்தை

தவறான வார்த்தை

பெருமை பேசுகிறேன் என்று தவறான வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்னர் அரசுப் பள்ளிகளிலிருந்து எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள் என்ற எண்ணிக்கை உங்களுக்கு தெரியுமா? பெருமை பேசுகிறேனு சொல்லாதீர்கள். உண்மையாகவே பெருமை கொள்கிறேன். ஏழைகள் படிக்க வேண்டும் என கஷ்டப்பட்டு உழைக்கிறேன் என முதல்வர் ஆவேசமாக பதிலளித்தார்.

English summary
CM Edappadi Palanisamy gets angry when a reporter asks some questions in Nehru indore stadium.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X