சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

9-ம் வகுப்பிலேயே உலகம் வியக்கும் சாதனை.. அசத்திய மாதவ்.. தட்டிகொடுத்து பாராட்டிய ஸ்டாலின்.. நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிக்கூடங்கள் மூடியே கிடக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளே மாணவர்களுக்கு கைகொடுத்து வருகிறது.ஆன்லைன் வகுப்பு தவிர மற்ற நேரங்களில் மாணவர்கள் செல்போனில் விளையாடியே பொழுதை கழிக்கின்றனர்.

ஆனால் இப்படி விளையாட்டுதனமாக பொழுதை போக்காமல் சிறு வயதிலேயே அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் சாதனையை படைத்துள்ளார் தமிழ்நாடு மாணவர் ஒருவர்.

திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினம் பகுதி பழவனக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சேதுராசன் - சுதா தம்பதியினர். இவர்களின் மகன் மாதவ். 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

10.5% வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணைக்கு... தடை விதிக்க முடியாது.. சென்னை ஐகோர்ட் திட்டவட்டம்10.5% வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணைக்கு... தடை விதிக்க முடியாது.. சென்னை ஐகோர்ட் திட்டவட்டம்

பெரிய சாதனை

பெரிய சாதனை

ஆனால் இந்த மாணவர் செய்த செயலை கேட்டால் அப்படியே அசந்து போயீடுவீங்க. ஒன்பதாம் வகுப்பு மாணவரான மாதவுக்கு கணினி மேல் அலாதி பிரியம். எப்போதும் கணினியை இயக்கி கொண்டிருப்பார். இப்படி கணினி மேல் பற்று கொண்ட மாணவன் மாதவ், வெறும் 9-ம் வகுப்பிலேயே Java, Python, C, C++, Kotlin ஆகிய கணினி சாப்ட்வேர் பயிற்சிகளை முடித்துள்ளார்.

 மைய செயலாக்க கருவி

மைய செயலாக்க கருவி

இத்துடன் நின்று விடாமல் கணினியை இயங்கச் செய்யக் கூடிய மைய செயலாக்க கருவி எனப்படும் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்டை (CPU) கையடக்க அளவில் கண்டுபிடித்தும் சாதனை படைத்துள்ளார் மாணவர் மாதவ். இக்கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக Terabyte India CPU Manufacturing Company என்ற நிறுவனத்தினைத் தொடங்கி, இணையதளம் மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு மாதவ்.விற்பனை செய்து வருகிறார்.

தீவிர முயற்சி

தீவிர முயற்சி

சுமார் 2 ஆண்டுகள் தீவிர முயற்சி மேற்கொண்ட மாதவ், தற்போது சிறு வயதில் பெரிய இலக்கை எட்டியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தலங்களில் பரவ பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் மாணவர் மாதவ். இந்த செய்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காதுகளுக்கு சென்றடைந்தது. இதனால் அசந்து போன முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மாணவர் மாதவ்வை சென்னைக்கு வர உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தாய்-தந்தையுடன் சென்னைக்கு சிட்டாக பறந்து வந்தார் மாதவ்.

பாராட்டிய முதல்வர்

பாராட்டிய முதல்வர்

சென்னை தலைமை செயலகத்தில் வைத்து மாணவர் மாதவ்வின் கான்டுபிடிப்புக்காக அவரை தட்டி கொடுத்து பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கணினி தொடர்பான எஸ்.எஸ். மாதவ்-வின் உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்றும் முதல்வர் அவரிடம் உறுதியளித்தார். மென் பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் மெத்த படித்த சிலரே கணினி சாபட்வேர்களை இயக்குவதில் தடுமாறும் வேளையில், சிறு வயதில் மிகப்பெரிய சாதனையை படைத்த மாணவர் மாதவ்வை நெட்டிசன்களும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

English summary
Chief Minister MK Stalin lauded Madhav, a 9th class student, for creating a portable computer center processing tool
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X