சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாட்டியம்மா நல்லா இருங்கீங்களா.. நேராக வீட்டுக்குள் சென்ற ஸ்டாலின்.. அப்படியே நெகிழ்ந்து போன கொளத்தூர்

Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தலில் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதே கொளத்தூர் தொகுதியில் விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

கடந்த ஆண்டு தி.மு.க சார்பில் மக்களுக்கு கொரோனா உதவிகள் வழங்கியதையும், கொளத்தூர் தொகுதியிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது தவிர கொளத்தூர் சட்டசபை தொகுதியில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வந்தார். தற்போது ஆட்சி பொறுப்பேற்று முதல்வராக உள்ள நிலையிலும் தன்னை வெற்றி பெற செய்த கொளத்தூர் தொகுதியை ஸ்டாலின் மறந்து விடவில்லை.

ஹாட்ரிக் வெற்றி எப்படி?.. மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்.. அப்படியே வியந்துபோன கொளத்தூர் ஹாட்ரிக் வெற்றி எப்படி?.. மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்.. அப்படியே வியந்துபோன கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி

முதல்வராக பதவியேற்றது முதல் அடிக்கடி கொளத்தூர் தொகுதிக்கு சென்று மக்களையும் சந்திப்பதையும், அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதையும் மு.க.ஸ்டாலின் வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று கொளத்தூர் தொகுதிக்கு சென்று மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொளத்தூர் ஜவஹர் நகரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்குதல், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதல் உள்பட பல்வேறு உதவிகளை செய்தார். மேலும் அந்த பகுதியில் நடந்து சென்ற மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் தொகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். அவர் சாலையில் நடந்து சென்றபோது வீடுகளின் வாசலில் நின்று கொண்டிருந்த மக்கள் ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தனர்.

வயதான தம்பதியினருக்கு வணக்கம்

வயதான தம்பதியினருக்கு வணக்கம்

முதல்வர் ஸ்டாலினும் அவர்களை நோக்கி கைகூப்பியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டில் வயதான தம்பதியினர் வீட்டில் வாசலில் நின்றபடி முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காதவிதமாக திடீரென அவர்களின் வீட்டுக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

Recommended Video

    Ramadoss-க்கு MK Stalin கொடுத்த பிறந்த நாள் பரிசு...பூரிப்பில் PMK | Oneindia Tamil
    பொதுமக்கள் பாராட்டு

    பொதுமக்கள் பாராட்டு

    அந்த வயதான தம்பதிகளுக்கு வணக்கம் செலுத்தி விட்டு உடனடியாக வெளியே வந்தார். முதல்வர் திடீரென வீட்டுக்குள் வருகை புரிந்ததால் அந்த தம்பதியினர் ஆச்சரியம் அடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்களும் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தனர். முதல்வரான பிறகும் தொகுதியை மறக்காமல் அடிக்கடி நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

    English summary
    MK Stalin, who provided welfare assistance in the Kolathur constituency, went to the elderly couple's house and greeted them
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X