சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் இரங்கல் - விரைந்து மீட்க கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவில் கனமழை வெள்ளத்தால் மூணாறு தேயிலை தோட்டப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கு வேலை செய்த தமிழக தொழிலாளர்கள் மண்ணோடு புதைந்துள்ளனர். 17 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிச்சாமி, அனைவரையும் விரைவில் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்று கேரளா முதல்வரை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Recommended Video

    Munnar Landslide: சிக்கிய தமிழ் தேயிலை ஊழியர்கள்
    TamilNadu CM Palanisamy conveys deep condolences Munnar landslide victims families

    தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிஉயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கேரள முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணோடு மண்ணாக புதைந்தவர்களை மீட்க பேரிடர் மீட்புக்குழுவைச் சேர்ந்த 52 பேர் விடிய விடிய ஈடுபட்டனர். 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். காயங்களுடன் உயிரோடு மீட்கப்பட்ட அனைவரும் மூணாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இடுக்கி நிலச்சரிவு.... உயிரிழந்தவர்களில் 17 தமிழர்கள்... மேலும் 50 தமிழர்களின் கதியென்ன!!! இடுக்கி நிலச்சரிவு.... உயிரிழந்தவர்களில் 17 தமிழர்கள்... மேலும் 50 தமிழர்களின் கதியென்ன!!!

    நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami has conveyed deep condolences to the families in idukki district landslide. He posted to his official Twitter handle on Friday to post the condolences message.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X