சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளிநாட்டு பயணத்தில் என்ன நடந்தது? எவ்வளவு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.. முதல்வர் அதிரடி விளக்கம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வெளிநாட்டு எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : CM Edapadi palanisami return to tamilnadu

    சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வெளிநாட்டு எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் பெரிய வைரலாகி உள்ளது. லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்துவிட்டு, இரண்டு நாட்களுக்கு முன் தமிழகம் திரும்பினார்.

    இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமியின் வெளிநாடு பயணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். முதல்வர் எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தார் என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

    என்ன

    என்ன

    இந்த நிலையில் தனது வெளிநாட்டு பயணம் குறித்து தற்போது முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், மு.க ஸ்டாலின் சொல்வது அனைத்தும் பொய். நாங்கள் முதலீட்டை ஈர்க்கவில்லை என்று அவர் கூறுகிறார். அவர் பேசுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    அவர் என்ன முதலீட்டை ஈர்த்தார்?. திமுக ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியும். திமுக ஆட்சியில் 26 ஆயிரம் கோடிதான் முதலீடு பெறப்பட்டது. ஆனால் தமிழக அரசின் அதிமுக ஆட்சியின் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது

    விளக்க அளித்தார்

    விளக்க அளித்தார்

    ஸ்டாலின் எப்போது வெள்ளை அறிக்கை வெளியிட்டார். திமுக ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை. 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் என்னுடைய வெளிநாட்டு பயணத்தில் போடப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற போகிறார்கள்.

    எவ்வளவு

    எவ்வளவு

    இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் மிக மிக குறுகிய காலத்தில் செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது 4 மாதங்களுக்கு ஒருமுறை வெளிநாடு சென்றார். அதன்மூலம் அங்கு முதலீடுகள் அதிகம் செய்யப்பட்டது

    தமிழ்கம்

    தமிழ்கம்

    நான் வெளிநாடு சென்ற போது, என்னிடம் தமிழகம் குறித்து வெளிநாட்டு அதிகாரிகள் புகார் வைத்தனர் தமிழக முதல்வர்கள் யாரும் வெளிநாடு வரவேயில்லை, 40 வருடங்களாக தமிழக முதல்வர்கள் வெளிநாடு வரவில்லை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள், என்று முதல்வர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tamilnadu CM Palanisamy's explains about the achievements od his foreign trip.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X