சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக காங்கிரஸ் தலைமையில் விரைவில் மாற்றம் வரும்.. குஷ்பு பரபர பேட்டி!

தமிழக காங்கிரஸ் தலைமையில் விரைவில் மாற்றங்கள் வரும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமையில் விரைவில் மாற்றங்கள் வரும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தற்போது திருநாவுக்கரசர் செயல்பட்டு வருகிறார். ஆனால் இவர் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வருகிறது.

திருநாவுக்கரசருக்கு பதிலாக பீட்டர் அல்போன்ஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

குஷ்பூ தனது பேட்டியில், பிரதமர் மோடி எங்களை விமர்சிக்கும் முன் பாஜகவை பார்க்க வேண்டும். பாஜகவின் கூட்டணியே சுயநல கூட்டணிதான். மோடியால் எங்கள் கூட்டணியை விமர்சிக்க முடியாது. அவர்கள் கூட்டணியிலேயே இப்போது பல குழப்பங்கள் நிலவி வருகிறது.

பாஜக கூட்டணி

பாஜக கூட்டணி

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. பாஜக தேர்தல் தோல்வியில் இருந்தே இன்னும் மீளவில்லை. முதலில் அவர்கள் அதில் இருந்து மீளட்டும். பின் எங்களை பற்றி பேசட்டும். அவர்கள் தோல்வியை தாங்க முடியாமல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகிறார்கள்.

குலாம் நபி ஆசாத் சந்திப்பு

குலாம் நபி ஆசாத் சந்திப்பு

இன்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தை சந்தித்தேன். ஆனால் என்ன பேசினோம் என்று சொல்ல முடியாது. சில முக்கிய விஷயங்களை பேசினோம். அதேபோல் நட்பு ரீதியாகவும் பேசினோம்.

காங்கிரஸ் தலைமை மாற்றம்

காங்கிரஸ் தலைமை மாற்றம்

தமிழக காங்கிரஸ் தலைமையில் விரைவில் மாற்றங்கள் வரும் என்று கேள்விப்பட்டு உள்ளேன். ஆனால் குலாம் நபி ஆசாத்திடம் அதுகுறித்து பேசவில்லை. மாற்றம் வரும் போது பார்க்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Congress may see new Chief soon says Congress National spokesperson Kushboo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X