சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபாஷ் தமிழகம்! 41,000 பேருக்கு இன்று பரிசோதனை.. குறையும் பலி.. பின்னணி இதுதான்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வழக்கமாக 34 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று இதுவரை இல்லாத அளவாக 41038 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் டெஸ்டிங் மிக அதிகமாக நடத்தப்படுகிறது.

டெஸ்டிங்கை அதிகரிப்பதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் கண்டு அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பை குறைக்க இயலும்.

எனவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தாலும் விரைவாக கண்டுபிடிப்பதன் மூலம் நோயாளிகள் காப்பாற்றப்படுவதும், புதிதாக அவர்களால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதும் தடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 4231 பேருக்கு கொரோனா.. சென்னையில் குறைவு.. பிற மாவட்டங்களில் அதிகரிப்புதமிழகத்தில் ஒரே நாளில் 4231 பேருக்கு கொரோனா.. சென்னையில் குறைவு.. பிற மாவட்டங்களில் அதிகரிப்பு

சமூக இடைவெளி

சமூக இடைவெளி

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல், அடிக்கடி கைகழுவுதல் போன்றவற்றை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேநேரம் கொரோனா பரவலை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அரசு செய்ய வேண்டிய உடனடி நடவடிக்கையாகும். அதை தமிழக அரசு விரைவாக செய்து வருகிறது.

அதிக பரிசோதனை

அதிக பரிசோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 41,038 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 4231 பேர் தொற்றுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 14,28,360 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 1,26,581 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெஸ்டிங் அதிகரிப்பு

டெஸ்டிங் அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் டெஸ்டிங் என்று பார்த்தால், 42,369 சாம்பிள்கள் டெஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 14,91,783 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பரிசோதனைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அரசு விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகிறது. இதனால் தான் உயிரிழப்பு சதவீதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. தமிழகத்தில் 1,26,581 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதில் 1,765 பேர் தான் இதுவரை இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் இணைநோய் பாதிப்பு உள்ளவர்கள் என்பதும் அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

சமூக இடைவெளி

சமூக இடைவெளி

கொரோனவை தடுக்க மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் வெளியில் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இப்படி செய்தால் பலர் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். இதுவே கொரோனாவை தடுக்க இருக்கும் ஒரே மருந்து.

English summary
41,000 Persons tested today in tamilnadu. till now 14,91,783 tested in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X