சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயிர்க் கடன் தவணை 3 மாதம் நீட்டிப்பு.. சொத்து வரி, குடிநீர் கட்டண கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது. வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

Tamilnadu: Crop loans to co-operatives is extended to 3 months

எடைகளும்,அளவைகளும் சட்டம் தமிழ்நாடு கடைகள் (ம) நிறுவனங்கள் சட்டம் (TN Shops & Establishments Act), உள்ளாட்சி அமைப்புகளால் அமல்படுத்தப்படும் கேடும் குற்றமும் பயக்கும் தொழிற்சட்டம் ஆகியவற்றின் கீழ், புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களின் கால அவகாசம் 3மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

"கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்" என்ற சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான சிறப்பு கடனுதவி திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதன தேவைகளுக்காக செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கும், அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத்தொகை செலுத்துவதற்கும், கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

Tamilnadu: Crop loans to co-operatives is extended to 3 months

சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்பு கட்டணம் செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
மோட்டார் வாகன சட்டப்படி உரிமங்கள் (ம) வாகன தகுதிச் சான்றுகள் (License & FC) புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்துவதிலுள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
எனவே மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகை தொகையை 2 மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என வீட்டு உரிமையாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் (TIIC) கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று 2-ஆம் கட்டத்தில் இருப்பதாகவும், அது 3-ஆம் கட்டத்திற்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து, தங்கள் வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை சிறப்பாக கையாளுகிறீர்கள்.. நேரில் சந்தித்த முதல்வரை பாராட்டிய ஆளுநர் தமிழகத்தில் கொரோனா பரவலை சிறப்பாக கையாளுகிறீர்கள்.. நேரில் சந்தித்த முதல்வரை பாராட்டிய ஆளுநர்

எனவே, அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு பிறப்பித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும், எந்தவிதமான வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகள் பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

உங்களின் நன்மைக்காகவும், உங்கள் குடும்பத்தின் நன்மைக்காகவும், நம் நாட்டின் நன்மைக்காகவும், பொதுமக்கள் அனைவரும் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். விழித்திருப்போம்; விலகியிருப்போம்; வீட்டிலேயே இருப்போம்; கொரோனாவை வெல்வோம்!

English summary
The duration of payment of installments of crop loans to co-operatives is extended to 3 months (up to 30.6.2020). The term of payment of installments to Housing Co-operative Societies extends to 3 months, in Tamilnadu, says CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X