சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா மரணங்கள்.. இணை நோய் இல்லாத 6 பேர் உட்பட 39 பேர் பலி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 1949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 21 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை காரணமாக ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாட்டில் R Factor அதிகமாக உள்ளதாக மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இதனால் கூடுதலாகவும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாகக் குறைந்து வந்த வைரஸ் பாதிப்பு, இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 'யார்கிட்டையும் சொல்லக் கூடாது..' டெல்லியில் தலித் சிறுமி பாலியல் படுகொலை.. தாயை மிரட்டிய பூசாரி 'யார்கிட்டையும் சொல்லக் கூடாது..' டெல்லியில் தலித் சிறுமி பாலியல் படுகொலை.. தாயை மிரட்டிய பூசாரி

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 1.56 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 12 வயதுக்கு உட்பட்ட 110 சிறார்கள் உட்பட மொத்தம் 1949 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 25,67,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் தஞ்சை மாவட்டத்திலேயே பாசிட்டிவ் விகிதம் அதிகமாக உள்ளது. தஞ்சையில் இன்று பாசிட்டிவ் விகிதம் 2.7% ஆக உள்ள நிலையில், சென்னை (1.7%), கோவை (1.9%), ஈரோடு (2.4%), திருப்பூர் (1.7%) மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் சற்று அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.3% ஆகவே தொடர்கிறது.

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

நேற்று மாநிலத்தில் 29 பேர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில் இன்று உயிரிழப்பு 38ஆக அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 26 பேர் என மொத்தம் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாகவே 30க்கும் கீழாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களில் 5 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 6 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள் ஆகும். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் இதுவரை 34,197 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்களை பொறுத்தவரைத் தமிழ்நாட்டில் குறைந்தே வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று 20,217ஆக இருந்த நிலையில், இன்று அது 20,117ஆக மேலும் குறைந்துள்ளது. இன்று மட்டும் மாநிலத்தில் 2,011 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 25,13,087 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு

தினசரி வைரஸ் பாதிப்பு இன்றும் கோவையிலேயே அதிகமாக உள்ளது. கோவையில் இன்று 226 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் நேற்று 203 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்று அது 189ஆக குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோடு (154), செங்கல்பட்டு (114), தஞ்சை (110) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.

13 மாவட்டங்களில் உயரும் கொரோனா

13 மாவட்டங்களில் உயரும் கொரோனா

நேற்றைய வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடுகையில் கோவை ஈரோடு உட்பட 21 மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாகத் திருவள்ளூரில் 5 பேரும், கோவை மற்றும் திருவாரூரில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் மதுரை, நெல்லை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

English summary
Tamilnadu's latest announcement on daily Corona cases. NO Corona deaths in 22 districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X