சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு பயணம்.. அமெரிக்கா செல்கிறார் ஓ.பி.எஸ்!

நவம்பர் 8ஆம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: நவம்பர் 8ஆம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

தமிழக முதல்வர் பழனிச்சாமி கடந்த செப்டம்பர் மாதம் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மொத்தம் 3 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். 14 நாட்கள் அவர் வெளிநாடு பயணம் மேற்கொண்டார்.

Tamilnadu Deputy CM Paneerselvam goes on a foreign trip next week

இந்த நிலையில் முதல்வர் பழனிச்சாமியின் பயணத்தை தொடர்ந்து தற்போது துணை முதல்வர் பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். மொத்தம் 10 நாட்கள் பயணமாக அவர் அமெரிக்காவில் பல்வேறு இடங்களை பார்வையிட இருக்கிறார்.

அங்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கிறார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.

தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!

நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் இவர்கள் பல்வேறு ஆலோசனைகளை நடத்துகிறார்கள். மேலும் சிகாகோவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

English summary
Tamilnadu Deputy CM Paneerselvam goes on a foreign trip coming November 7th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X