சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 149.. 4 மாவட்டங்களில் கொரோனா இல்லை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தலைநகரில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 69 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மொத்த எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கொரோனா வைரஸ் ஜோக்ஸ்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டால் கைதா? உண்மை என்ன கொரோனா வைரஸ் ஜோக்ஸ்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டால் கைதா? உண்மை என்ன

பீலா ராஜேஷ்

பீலா ராஜேஷ்

மேலும், சென்னை திருவிக நகரை சேர்ந்த 64 வயது பெண்மணி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், எனவே பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். இவரது பேட்டியை தொடர்ந்து எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியிடப்பட்டது.

ஒரே நாளில் 39

ஒரே நாளில் 39

அதன்படி சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டு அங்கு 149 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதலிடத்தில் சென்னை நீடித்து வருகிறது. கோவை மாவட்டத்திற்கு இரண்டாவது இடம். அங்கு 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல், நெல்லை

திண்டுக்கல், நெல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் 45, நெல்லை மாவட்டத்தில் 38, ஈரோடு மாவட்டத்தில் 32, திருச்சி மாவட்டத்தில் 23, நாமக்கல் மாவட்டத்தில் 28, ராணிப்பேட்டை 27, செங்கல்பட்டு மற்றும் மதுரை 24, கரூர் மற்றும் தேனி 23, தூத்துக்குடி மாவட்டத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்கள்

மாவட்டங்கள்

விழுப்புரம், திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் தலா 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 13 பேர். நாகை, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் தலா 11 பேர், சேலம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சை, விருதுநகர் மாவட்டங்களில் தலா 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 மாவட்டங்களில் கொரோனா இல்லை

4 மாவட்டங்களில் கொரோனா இல்லை

கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 6 பேர், சிவகங்கை, வேலூரில் தலா 5 பேர், நீலகிரி 4, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 2, அரியலூர், பெரம்பலூரில் தலா ஒருவர் பதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு கிடையாது.

English summary
Tamilnadu district wise coronavirus cases on today: Chennai is in the first place followed by Coimbatore and Dindigul. there are four districts in Tamilnadu reports no cases still now health secretary Beela Rajesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X