சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் எதெல்லாம் தெரியுமா? முழு விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1286 என்ற அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிலும், 1012 பேருடன் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது சென்னை மாவட்டம்.

சென்னையை பொறுத்த அளவில் பரிசோதனை செய்யப்படுவோரில் ஐந்தில் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது புள்ளி விவரங்களின் மூலம் உறுதியாக தெரிகிறது.

மற்ற மாவட்டங்களில் நிலைமை எப்படி இருக்கிறது? சென்னைக்கு அடுத்தபடியாக எந்தெந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருக்கிறது? என்பது பற்றிய ஒரு பார்வை இதோ:

வெளிநாட்டு பிசினஸ்மேன்கள், எஞ்சினியர்கள், மருத்துவர்களுக்கு விசா வழங்கப்படும்.. மத்திய அதிரடி அனுமதிவெளிநாட்டு பிசினஸ்மேன்கள், எஞ்சினியர்கள், மருத்துவர்களுக்கு விசா வழங்கப்படும்.. மத்திய அதிரடி அனுமதி

சென்னைக்கு அடுத்து பாதித்த மாவட்டங்கள்

சென்னைக்கு அடுத்து பாதித்த மாவட்டங்கள்

சென்னைக்கு அடுத்தபடியாக அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பது அண்டையில் உள்ள செங்கல்பட்டுதான். அங்கு 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு அண்டை மாவட்டம் திருவள்ளூரில் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்கள் அனைத்துமே சென்னைக்கு மிக அருகில் இருக்கக் கூடியவை என்பது இதில் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி

இதற்கு அடுத்தபடியாக அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்றால் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். அங்கு இன்று 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்த மாவட்டத்தில் 294 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை 465 என்ற அளவில் உள்ளது.

மதுரை, கோவை

மதுரை, கோவை

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் மற்றும் ராணிப்பேட் ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 2 பேர், கடலூரில் 5 பேர், கோவை மாவட்டத்தில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் தலா 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டுக்கு 2வது இடம்

செங்கல்பட்டுக்கு 2வது இடம்

விழுப்புரம், விருதுநகர், சேலம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா ஒருவர் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 598 பேர். இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிக்கக்கூடிய மாவட்டம் செங்கல்பட்டு. 5 ஆயிரத்து 370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது திருவள்ளூர் மாவட்டம். அங்கு 1087 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைவான கொரோனா வைரஸ் பாதிப்பு

குறைவான கொரோனா வைரஸ் பாதிப்பு

மிகக்குறைவான கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடிய மாவட்டம் என்பது தர்மபுரி. அங்கு இதுவரை 9 பேர் மட்டும் பாதிப்படைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 14 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28 பேருக்கு பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டையில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் மொத்தம் 33 பேர் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
District wise coronavirus cases update from Tamilnadu is here. The first place goes to Chennai and the last place to Dharmapuri district. பere is the full list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X