சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தொடக்கம்.. ரயிலில் செல்ல இ பாஸ் கட்டாயம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே சிறப்பு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதில் பயணம் செய்யும் மக்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் தொடங்கிய போக்குவரத்து..தகவல்கள்

    தமிழகத்திற்கு உள்ளே 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே துறை முடிவு எடுத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    Tamilnadu: E Pass is must for people using train service in 4 routes says Southern Railway

    தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி, கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் போக்குவரத்து தற்போது தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு இ - பாஸ் கட்டாயம் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ரயில் சேவை நாளையில் இருந்து துவங்குகிறது. அதாவது மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணிப்பதற்கு இ-பாஸ் கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    மாநிலங்களுக்கிடையே மக்கள் பயணம் செய்யலாம்.. இனி ஈ பாஸ் தேவையில்லை.. மத்திய அரசுமாநிலங்களுக்கிடையே மக்கள் பயணம் செய்யலாம்.. இனி ஈ பாஸ் தேவையில்லை.. மத்திய அரசு

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டது . தமிழகத்தில் மண்டலங்களுக்கு உள்ளே பேருந்தில் செல்ல பாஸ் தேவை இல்லை என்று இன்றுதான் அறிவிக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இ பாஸ் தேவை இல்லை. இதில் மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று நேற்றுதான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    தமிழக அரசு பயணிகளுக்கு ரயிலில் செல்ல இ பாஸ் பெறுவதற்கான வசதியை இணையத்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ரயிலில் செல்வோர் இ பாஸ் பெற https://tnepass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    English summary
    Tamilnadu: E Pass is must for people using train service in 4 routes says Southern Railway today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X