India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்வாரியத்தில் ஆள்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து.. கட்டணமும் திருப்பி அளிப்பதாக அறிவிப்பு.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உள்பட 5,318 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. இதற்காக தேர்வு நடத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு தெரிவித்தது.

Tamilnadu Electricity Board cancels its notification to fill 5318 posts

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த தேர்வுகள் கொரோனா, சட்டசபை தேர்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தேர்வுகள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எங்களுக்கு இதான் வேலையா? - மின்வாரிய பொறியாளர் அலட்சியம்.. தீயாகப் பரவும் ஆடியோ!.. ஏற்கனவே சம்பவம்? எங்களுக்கு இதான் வேலையா? - மின்வாரிய பொறியாளர் அலட்சியம்.. தீயாகப் பரவும் ஆடியோ!.. ஏற்கனவே சம்பவம்?

இதனால் ஏற்கெனவே ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. கணினி வழித் தேர்வு ரத்து செய்யப்பட்டு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். ஏற்கெனவே ஒரு முறை இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Electricity Board cancels its notification to fill 5,318 vacancies in the department for various posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X