சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடுமைதான்.. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு முன் நகர்ந்தது தமிழகம்!

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்கள் எண்ணிக்கையில், தமிழகம், 3வது இடத்திலிருந்து முன்நகர்ந்து, 2வது இடத்தை பிடித்துள்ளது.

Recommended Video

    8 கி.மீக்கு கன்டெய்ன்மெண்ட் பிளான்... தமிழக அரசு அதிரடி

    தமிழகத்தில் ஆரம்பத்தில் குறைவாகத்தான் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இருந்தது. ஆனால் இன்று 75 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. நேற்று 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், கிடுகிடுவென இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    Tamilnadu gets 2nd place in coronavirus case count

    இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் இதுவரை உறுதிச் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 309ஆக உள்ளது. இதில் 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஒரு நோயாளி, சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.

    மகாராஷ்டிரா 359 நோயாளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அங்கு புதிதாக இன்று 85 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் 293 பேருக்கு பாதிப்பு உள்ளது. அதில் 141 பேர் இன்று புதிதாக கண்டறியப்பட்டவர்களாகும்.

    நாளை முதல் ஜன் தன் யோஜனா கணக்குகளில் ரூ.500 டெபாசிட்... யார் யார் எப்போது பணம் எடுக்கலாம்..?நாளை முதல் ஜன் தன் யோஜனா கணக்குகளில் ரூ.500 டெபாசிட்... யார் யார் எப்போது பணம் எடுக்கலாம்..?

    கேரளாவில் 286 பேரும், தெலுங்கானாவில் 154, ஆந்திரா 149, ராஜஸ்தான் 133, கர்நாடகா 124, உத்தரபிரதேசம் 121 என்ற அளவில் பட்டியல் உள்ளது. கர்நாடகாவில் இன்று 14 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    நேற்று வரை, 3வது இடத்தில் இருந்த தமிழகம், இன்றைய நிலவரப்படி, 2வது இடத்திற்கு முன் நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu gets 2nd place in coronavirus case count, says statistics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X