சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி டூ தமிழ்நாடு.. அதிர்ச்சி தந்த 3 நாட்கள்.. நம்ம மாநிலமா இது.. 2வது இடத்துக்கு முன்னேறியது ஏன்?

தமிழகம் 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. இந்த 3 நாட்களாக வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு எண்ணிக்கை கூடும் என்பதை நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.. சீரியஸ்னஸ் இல்லாமல் வெளியே சுற்றிக் கொண்டும், சமூக விலகலை கண்டுக்கொள்ளாமலும் இருந்த மக்கள் பெரும்பாலானோருக்கு இப்போதுதான் பயமே வந்துள்ளது.. ஒட்டுமொத்த நாட்டில் தமிழகம் தொற்று அதிகம் பாதித்த 2வது இடத்துக்கு முன்னேறி விட்டது பெருத்த வேதனையையும், ஷாக்கையும் ஏற்படுத்தியது.. தற்போது பாதிக்கப்பட்டவர்கள் 411 ஆக உயர்வடைந்து உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் கூடிவிடாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் நம்மை சூழ்ந்து கொண்டுள்ளது!

Recommended Video

    8 கி.மீக்கு கன்டெய்ன்மெண்ட் பிளான்... தமிழக அரசு அதிரடி

    தமிழகத்தில் எந்தெந்த வழிகளில் எல்லாம் இந்த வைரஸ் பரவியது என்று பார்ப்போம்! இங்கு கொரோனா தொற்று நோயாளிகள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான்... பயணிகள் பலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.

    தாய்லாந்து, அமெரிக்கா, இந்தோனேஷியா, நியூசிலாந்து, பிரான்ஸ், பிரிட்டன், துபாய், ஸ்பெயின், தாய்லாந்து, ஓமன், அபுதாபி,தோஹா, மேற்கு இந்திய தீவுகள் போன்ற நாடுகளில் இருந்து இருந்து நேரடியாகவும் மற்ற நகரங்கள் வழியாகவும் தமிழகம் வந்தவர்கள் மூலம் கொரோனா பரவியது.. இதுதான் துவக்கம்!

     நெருங்கி நின்று பேசினாலும்.. மூச்சு விட்டாலும் கூட கொரோனா பரவுமாம்.. அதிர வைக்கும் அமெரிக்க ஆய்வு நெருங்கி நின்று பேசினாலும்.. மூச்சு விட்டாலும் கூட கொரோனா பரவுமாம்.. அதிர வைக்கும் அமெரிக்க ஆய்வு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அடுத்ததாக, மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்.. குறிப்பாக டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு அவரவர் ஊர் திரும்பியவர்களுக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது... மேலும் பெங்களூரு, திருவனந்தபுரத்தில் இருந்து வந்தவர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டது.

    முதியவர் மரணம்

    முதியவர் மரணம்

    இதற்கு அடுத்தபடியாகதான், நேரடியாக இருந்த நிலையில், தொற்று ஏற்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரவ தொடங்கியது.. இதில் தாய்லாந்தில் இருந்து வந்தவர்களுடன் பயணித்து வந்தவருக்கு தொற்று ஏற்படவும், அந்த நபருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர், அவரது வீட்டில் இருந்த 3 பேருக்கும் கொரோனா பரவியது... இந்த சமயத்தில்தான் மதுரையில் கொரோனாவால் முதியவர் உயிரிழக்கவும், அவர் குடும்பத்தினருக்கும் வைரஸ் பரவியது.

    இளம்பெண்

    இளம்பெண்

    சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது நபருக்கு கொரோனா உறுதியானதே தவிர, எதன்மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை... ஆனால் அதற்குள் அவரது அப்பார்ட்மென்ட்டில் 4 பேருக்கும் பரவியது.. இதேபோல, சென்னையில் பீனிக்ஸ் மாலில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கும் எப்படி கொரோனாபரவியது என்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

    கலக்கம்

    கலக்கம்

    வைரஸ் பரவியது இந்தெந்த வழிகளில் என்றால், கடந்த 3 நாட்களில் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.. ஒவ்வொரு நாளும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதும் தமிழக மக்களுக்கு தானாக கலக்கம் வந்து போகிறது. நேற்றுமுன்தினம் வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    மாநாடு

    மாநாடு

    இதில் 74 பேர் டெல்லி தப்லித் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மேலும் ஒருவர் சென்னையை சேர்ந்தவர். அவர் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 1,103 பேருக்கும் சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்தது.

    கண்காணிப்பு

    கண்காணிப்பு

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் நேற்றே 2-ம் இடத்திற்கு வந்துவிட்டது.. தமிழகத்தை பொறுத்த வரையில் மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது. இந்நிலையில், இன்று கூடுதலாக 102 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்வடைந்து உள்ளது.

    ட்விட்டர்

    ட்விட்டர்

    இது சம்பந்தமாக அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது... 1,580 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3,684 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 789 பேருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. 484 பேருக்கு இன்னும் பரிசோதனை முடிவு வரவில்லை" என்றார்.

    அச்சம்

    அச்சம்

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் தீவிர கண்காணிப்பில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் இந்த 3 நாட்களுமே தமிழக மக்களிடம் ஒருவித அதிர்ச்சி காணப்படுகிறது.. சீரியஸ்தன்மை வந்துள்ளது.. அடங்காமல் வெளியே சுற்றி கொண்டிருந்த ஒரு சிலரும் இந்த லிஸ்ட்டை பார்த்து நடுங்கி உள்ளனர்.. தொற்று உள்ள ஒரு நபர் சுதந்திரமாக வெளியே நடமாடினால் அவரால் குறைந்தது 3 ஆயிரம் பேருக்காவது இந்த தொற்றை பரப்பிவிட முடியுமாம்.. அந்த அளவுக்கு படுடேஞ்சரான வைரஸாக இது உள்ளது.. தமிழக மக்கள் இப்போது அரசுக்காக இல்லாமல் தங்களுக்காகவே ஊரடங்கினை மதித்து, சமூக விலகலை கடைபிடிக்க தொடங்கி உள்ளது ஆறுதலான விஷயமாக உள்ளது!

    English summary
    tamilnadu gets 2nd place in coronavirus case count and virus affected districts
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X