சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 மாதத்தில் ரூ.25,000 கோடி.. தமிழகத்தில் அடுத்தடுத்து குவியும் முதலீடுகள்.. சாதித்த முதல்வர்.. செம!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் ரூ.25,527 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நிறைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்கள் பொருளாதார சரிவு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து அதிக அளவில் முதலீடுகள் குவிந்து வருகிறது.

அதிலும் சென்னையில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடுகளை செய்து வருகிறது. அமெரிக்கா மற்றும் தைவானை சேர்ந்த நிறுவனங்கள் சென்னையில் முதலீடுகளை குவிக்க தொடங்கி உள்ளது.

வெங்காயம் பறிக்க வரும் பிற மாவட்ட தொழிலாளர்களுக்கு உடனே இ பாஸ் வழங்க வலியுறுத்தல்வெங்காயம் பறிக்க வரும் பிற மாவட்ட தொழிலாளர்களுக்கு உடனே இ பாஸ் வழங்க வலியுறுத்தல்

இன்று ஒப்பந்தம்

இன்று ஒப்பந்தம்

தமிழகத்தில் இந்த நிலையில் இன்று முதல்வர் பழனிச்சாமி தலைமையில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. மொத்தம் 8 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது. இதன் மூலம் இன்று மட்டும் தமிழகத்தில் ரூ.10,399 கோடியில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது.

எத்தனை வேலைகள்

எத்தனை வேலைகள்

தலைமை செயலகத்தில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இந்த 8 ஒப்பந்தங்களில் 5 ஒப்பந்தங்கள் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் 13000-14000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மட்டுமின்றி கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் ரூ.25,527 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நிறைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த அளவிற்கு முதலீடு செய்யப்படவில்லை. இந்த வருடத்தில் அதிக முதலீடுகள் ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவை முந்தி தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது.

என்ன வேலைகள்

என்ன வேலைகள்

அதன்படி பின் வரும் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது.

கோவையில் ELGI equipments நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதற்காக அந்த நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அதேபோல் கோவையில் ஆக்குவாசப் நிறுவனம் முதலீடு செய்கிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதேபோல் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 36 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டம் சிப்காட்டில் ஜேஎஸ் ஆட்டோ காஸ்ட் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதற்காக 40 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

வேறு எங்கு

வேறு எங்கு

ராணிப்பேட்டையில் என்டிஆர் infrastructure நிறுவனம் முதலீடு செய்யப்படுகிறது. 200 கோடி ரூபாய் அங்கு முதலீடு செய்யப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் இரண்டு பெரிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் விக்ரம் சோலார் நிறுவனம் முதலீடு செய்கிறது.அங்கு 5423 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. மேலும் வாலாஜாபாத்தில்250 கோடி ரூபாய்க்கு இன்னொரு முதலீடு செய்யப்பட உள்ளது.

செங்கல்பட்டில் ஹீரானன்தானி நிறுவனம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

English summary
Tamilnadu gets 8 more investment in a day: Got Rs 25,000 Cr in 4 months so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X