சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று முதல் 34 வகையான தனிக்கடைகள் திறக்க அனுமதி.. எந்தெந்த கடைகள்.. பட்டியல் இதோ!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் (திங்கள் முதல்) 34 வகையான தனிக்கடைகளை திறக்க ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ள

Recommended Video

    Lockdown relaxation: மத்திய அரசின் அறிவிப்புக்கு என்ன காரணம்? மே 17க்கு பிறகு என்ன நடக்கும்?

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24-ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. கடந்த மே 2 ஆம் தேதி அன்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

    Tamilnadu Government allows 34 standalone shops to operate from tomorrow

    அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) பல செயல்பாடுகள், பணிகள், மே 11ஆம் தேதி திங்கள்கிழமை முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவது தொடர்பாக மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பிற தனிக் கடைகள் பிரிவில் கீழ்க்கண்ட கடைகள் திறக்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:

    • டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
    • பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
    • உணவகங்கள் (பார்சல் மட்டும்)
    • பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
    • கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
    • சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
    • மின் சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
    • மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
    • கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
    • வீட்டு உபயோக இயந்திரங்கள் (House Hold appliances) மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
    • மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
    • கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
    • சிறிய நகைக் கடைகள் (குளிர் சாதன வசதி இல்லாதவை)
    • சிறிய ஜவுளிக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை- ஊரக பகுதிகளில் மட்டும்)
    • மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
    • டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
    • பெட்டி கடைகள்
    • பர்னிச்சர் கடைகள்
    • சாலையோர தள்ளுவண்டி கடைகள்
    • உலர் சலவையகங்கள்
    • கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
    • லாரி புக்கிங் சர்வீஸ்
    • ஜெராக்ஸ் கடைகள்
    • இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
    • இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
    • நாட்டு மருந்து விற்பனை கடைகள்
    • விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
    • டைல்ஸ் கடைகள், பெயிண்ட் கடைகள்
    • எலக்ட்ரிக்கல் கடைகள்
    • ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
    • நர்சரி கார்டன்கள்
    • மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
    • மரம் அறுக்கும் கடைகள்

    முடிதிருத்தும் நிலையங்கள் (சலூன்கள்), ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

    மாலத்தீவில் இருந்து 19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன் கொச்சியில் ஐ.என்.எஸ். ஜலாஷ்வா கப்பல்மாலத்தீவில் இருந்து 19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன் கொச்சியில் ஐ.என்.எஸ். ஜலாஷ்வா கப்பல்

    ஊரடங்கு தளர்வின் போது ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் அல்லது கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையை பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு அல்லது கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும்.

    மேற்குறிப்பிட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாநகராட்சி ஆணையாளர்களும் காவல் துறையினர், அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள், நிறுவனங்களில் பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்யவும், தனிநபர் இடைவெளியே பின்பற்றப்படுவதையும் போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும் பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும் அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதையும் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அதிமுக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொது மக்களும் தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Government allows 34 standalone shops to operate from tomorrow in Non Containment Zones.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X