சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி.. 3 கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தீவுத்திடல் உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Recommended Video

    சென்னை உணவுத் திருவிழாவில் BEEF சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு

    உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று முதல் 3 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற பெயரில் இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

    இந்த உணவுத் திருவிழாவை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் பீப் பிரியாணி அரங்கு ஏன் அமைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    அத விடுங்களேன் சார்.. நானும் சாப்பிடுற ஆள் தான்.. பீஃப் பிரியாணி கேள்விக்கு அமைச்சர் மா.சு. பதில்! அத விடுங்களேன் சார்.. நானும் சாப்பிடுற ஆள் தான்.. பீஃப் பிரியாணி கேள்விக்கு அமைச்சர் மா.சு. பதில்!

    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    இதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளிக்கையில், நானும் பீப் பிரியாணி சாப்பிடுபவன்தான். ஆனால் இங்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் அனுமதி கோரவில்லை என்பதால் பீப் பிரியாணிக்கென அரங்கம் அமைக்கப்படவில்லை என்றார்.

    சென்னை தீவுத்திடல்

    சென்னை தீவுத்திடல்

    இந்தநிலையில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், சென்னை உணவு திருவிழாவில் 3 பீப் பிரியாணி கடைகளை அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி கேட்டனர்.

    ஆய்வு

    ஆய்வு

    அதன்பேரில் அவர்களுக்கு ஸ்டால் அமைத்துக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது. இன்று மாலை உணவு திருவிழாவுக்கு சென்று பீப் பிரியாணி விற்பனையை பார்வையிடவுள்ளேன் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி இடம் பெறாதது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.

    அனுமதி கிடைத்தது

    அனுமதி கிடைத்தது

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முழு முனைப்புடன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில் தற்போது பீப் பிரியாணி ஸ்டால் அமைக்க சிலர் உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தற்போது ஸ்டால் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசை பொருத்தமட்டில் பீப் பிரியாணி கடை போடுவதற்கு யாரும் முன்வரவில்லை என்பதால் உணவு திருவிழாவில் பீப் இடம்பெறவில்லை. தற்போது 3 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்கள் கடையை அமைக்க அனுமதி கொடுத்துள்ளது என்பதுதான்!

    English summary
    Tamilnadu government allows to form 3 beef briyani stalls in Chennai Food festival 2022.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X