Just In
அப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு
சென்னை: மதநல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது கோவை அப்துல் ஜபாருக்கு வழங்கப்படுகிறது, கால்நடை மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.

குடியரசு தினத்தையொட்டி விருது வழங்குவோர் பட்டியலை தமிழக அரசு இன்று காலை வெளியிட்டது. இதில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவருக்கு தமிழக அரசு சார்பில் வழங்கும் கோட்டை அமீர் விருது கோயமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஜபாருக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. இவர், வன யானைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.