சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ்.. முதல்வர் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Recommended Video

    TN CM Edappadi Palanisamy speech | முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

    12ம் வகுப்பு தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு, வேறொரு நாளில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Tamilnadu Government announce that students from 1 to 9 standard will get pass

    கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் அவர்கள் ஆண்டு இறுதித் தேர்வை எழுத முடியவில்லை. இந்த நிலையில்தான், முதல்வர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

    நேற்று பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்தது. ஆனால் நேற்று சில மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. எனவே அவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, இன்று காலை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டியில், வரும் ஏப்ரல் 14 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதனால், ஆண்டு இறுதித்தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இறுதித்தேர்வு புதுச்சேரியில் ரத்து செய்யப்படுகிறது. 1 ஆம் வகுப்பு முதல் 9 வரை படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

    இந்த நிலையில், தமிழக அரசும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாஸ் செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

    English summary
    CM edappadi palanisamy says, all the students who wrote 129 will be passed to next year
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X