சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களே..குட் நியூஸ்! சான்றிதழ் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்ப பதிவு கடந்த 20 ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது.

Tamilnadu government arts and science colleges change of dates for uploading certificates

ஜூலை 21-ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 620 விண்ணப்பங்களும், ஜூலை 22 ஆம் தேதி 53 ஆயிரத்து 342 விண்ணப்பங்களும், ஜூலை 23 ஆம் தேதி 34 ஆயிரத்து 924 விண்ணப்ப பதிவுகளும், ஜூலை 24ஆம் தேதி 20 ஆயிரத்து 351 விண்ணப்ப பதிவுகளும் பெறப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 737 மாணாக்கர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 975 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31 ஆகும்.

மத்திய அரசின் 'கருப்புச் சட்டங்களுக்கு' எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு- ஸ்டாலின்மத்திய அரசின் 'கருப்புச் சட்டங்களுக்கு' எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு- ஸ்டாலின்

இந்த நிலையில், இன்று முதல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய காலஅவகாசம் கோரியுள்ளனர்.

கோரிக்கையை ஏற்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய துவங்கப்படும் நாளாக ஜூலை 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி என இருந்ததற்கு பதிலாக, வருகிற ஆகஸ்டு 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாணவர்கள் என்ற இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

English summary
Change of dates for uploading certificates of students applying to join government arts and science colleges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X