சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்குங்கள்.. தென்னக ரயில்வேவிற்கு தமிழக அரசு கோரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வேயிற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் விரைவில் ரயில்கள் இயங்க வாய்ப்புள்ளது.

நாடு முழுக்க குறைந்த அளவிலான பயணிகள் ரயிலுக்கான முன் பதவி தொடங்கி உள்ளது. மார்ச் 25ம் தெத்து ரயில் சேவை நிறுத்தப்பட்ட பின் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிமாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் தொடங்கப்பட்டது.

Tamilnadu government asks train service in 4 routes from Southern Railway

அதை தொடர்ந்து நாடு முழுக்க சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சாதாரண ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதற்கான முன்பதிவும் தொடங்கப்படவில்லை.

அதன்பின் வரும் ஜூன் 1ல் இருந்து மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில மார்க்கங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. முக்கியமாக 'துரந்தோ, சம்பர்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூர்வா' ஆகிய ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ரயில்கள் இப்போது துவங்க வாய்ப்பில்லை. தமிழக அரசு ரயில்வே பயணத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வேயிற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருக்கிறது.

ஆர்.எஸ். பாரதி கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.. 3 எம்எல்ஏக்கள் உட்பட 96 திமுகவினர் மீது வழக்கு பதிவு!ஆர்.எஸ். பாரதி கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.. 3 எம்எல்ஏக்கள் உட்பட 96 திமுகவினர் மீது வழக்கு பதிவு!

தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி, கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால் சென்னை தொடர்பாக எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் விரைவில் ரயில்கள் இயங்க வாய்ப்புள்ளது. நாளை இது தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

English summary
Tamilnadu government asks train service in 4 routes from Southern Railway amid pre-booking all over India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X