சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு.. உடனே வெளிமாநிலத்தில் இருந்து கிளம்பி வர வேண்டாம்.. இதை கொஞ்சம் படிங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இ - பாஸ் முறையில் பெரிய தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமான சில மாற்றங்கள் உடன் இந்த தளர்வு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் போடப்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக இ பாஸ் முறை கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட இ பாஸ் முறை காரணமாக, பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் போனது.

இதனால் இ பாஸ் முறையில் தளர்வுகளை கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று தமிழக மக்கள் தொடர்ந்து இ பாஸ் தளர்வு குறித்து கோரிக்கை வைத்து வந்தனர்.

தமிழகத்தில் அதிரடி தளர்வுகள்.. இ-பாஸ் முதல் ஞாயிறு லாக்டவுன் வரை.. சந்தேகங்களும்.. விளக்கமும்! தமிழகத்தில் அதிரடி தளர்வுகள்.. இ-பாஸ் முதல் ஞாயிறு லாக்டவுன் வரை.. சந்தேகங்களும்.. விளக்கமும்!

தமிழகத்தில் இ - பாஸ் முறையில் தளர்வு.. பொது போக்குவரத்துக்கு அனுமதி.. தமிழக அரசு அதிரடி!தமிழகத்தில் இ - பாஸ் முறையில் தளர்வு.. பொது போக்குவரத்துக்கு அனுமதி.. தமிழக அரசு அதிரடி!

செப் 7ம் தேதி முதல் சென்னையில் ஓடப்போகுது மெட்ரோ ரயில்... மகிழ்ச்சியான அறிவிப்புசெப் 7ம் தேதி முதல் சென்னையில் ஓடப்போகுது மெட்ரோ ரயில்... மகிழ்ச்சியான அறிவிப்பு

செப்.1 முதல் பேருந்துகள் இயக்கம்- வழிபாட்டு தலங்கள் திறப்பு... இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்செப்.1 முதல் பேருந்துகள் இயக்கம்- வழிபாட்டு தலங்கள் திறப்பு... இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு தடை நீடிப்பு..புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து இல்லை முழு லிஸ்ட்பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு தடை நீடிப்பு..புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து இல்லை முழு லிஸ்ட்

முதல்வர் பழனிசாமி அதிரடி.. தமிழகத்தில் 4 மிக முக்கியமான தளர்வு.. எதற்கெல்லாம் அனுமதி? முழு விபரம்!முதல்வர் பழனிசாமி அதிரடி.. தமிழகத்தில் 4 மிக முக்கியமான தளர்வு.. எதற்கெல்லாம் அனுமதி? முழு விபரம்!

தமிழகத்தில் பொது ஊரடங்கு .. செப்.30 வரை தளர்வுகளுடன் நீட்டிப்பு.. முதல்வர் அறிவிப்புதமிழகத்தில் பொது ஊரடங்கு .. செப்.30 வரை தளர்வுகளுடன் நீட்டிப்பு.. முதல்வர் அறிவிப்பு

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

இந்த நிலையில் மக்களின் தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இ - பாஸ் முறையில் பெரிய தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமான சில மாற்றங்கள் உடன் இந்த தளர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டம் செல்லலாம்.

இனி தடை இல்லை

இனி தடை இல்லை

தமிழகத்திற்கு உள்ளே இனி பயணிக்க யாருக்கும் தடை இல்லை. ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வர தொடர்ந்து இ பாஸ் முறை அமலில் இருக்கும். அதாவது கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வர வேண்டும் என்றால் எப்போதும் இ பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். முறையான இ பாஸ் கிடைத்த பின்பே எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படும்.

எப்போதும் போல

எப்போதும் போல

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த பாஸ் விண்ணப்பித்த உடன் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இ பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது .

எப்படி விண்ணப்பிப்பது

எப்படி விண்ணப்பிப்பது

இ பாஸ் விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும். கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ பாஸ் வழங்கப்படும்.

English summary
Tamilnadu government changed E Pass: All you need to know about the new method.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X