சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000ஆக உயர்வு: ஓபிஎஸ் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்..! முதல்வர் அறிவிப்பு...

    சென்னை: அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.5000லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

    சட்டசபையில் இன்று, சில சலுகை அறிவிப்புகளை, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார். அவர் கூறுகையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 5000 ரூபாயிலிருந்து, 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். இது அரசு ஊழியர்களுக்கு பயனளிக்க கூடிய அறிவிப்பு என்றால், தொழில் செய்வோருக்கு பலன் அளிக்க கூடிய வகையில் மற்றொரு அறிவிப்பையும் ஓபிஎஸ் வெளியிட்டார்.

    Tamilnadu government employees will get extra benefit

    அதாவது, தொழில் நிறுவனங்களுக்கு இணையம் மூலமாக கட்டுமான அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்புதான் அது. இதுவரை நகர ஊரமைப்பு இயக்ககம் மூலமாக வழங்கப்பட்டு வந்தது, இதுபோன்ற, அனுமதி. இனி இணையம் வழியாக இந்த அனுமதி கிடைக்கும்.

    எனவே, காலநேர விரையம், வேறு பல நடைமுறை சிக்கல்கள் இந்த வழியில் குறைந்துவிடும். தொழில் முனைவோருக்கு இது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்ட அறிவிப்புகளில் இவை குறிப்பிடத்தக்கதாகும்.

    English summary
    OPS said the festive season prior money for Government employees has been increased from Rs 5,000 to Rs 10,000. If this is a benefit to public servants, OPS has issued another notification to benefit the employers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X