சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழந்தையின் தலை துண்டாக காரணம் என்ன.. பொது சுகாதாரத் துறை பரபரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரசவத்தின்போது குழந்தை தலையை பிய்த்து எடுத்த நர்ஸ்

    சென்னை: தாயின் வயிற்றில் இறந்த நிலையில் சிசுவானது 2 நாட்கள் இருந்ததால்தான் தலை துண்டாகியுள்ளது என பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று இரவு நிறை மாத கர்ப்பிணியான பொம்மி என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் அப்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பிரசவ வலி அதிகமாக இருந்ததால் அங்கிருந்த செவிலியர்களே பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    பிரசவத்தின்போது குழந்தை தலையை பிய்த்து எடுத்த நர்ஸ்.. கூவத்தூரில் கொடூரம்பிரசவத்தின்போது குழந்தை தலையை பிய்த்து எடுத்த நர்ஸ்.. கூவத்தூரில் கொடூரம்

    துண்டாகிய தலை

    துண்டாகிய தலை

    அப்போது குழந்தையின் தலை தெரிந்து அது வெளியே வரத் தொடங்கியது. வழக்கம் போல் தலையை பிடித்து இழுத்த போது தலை துண்டாகி வெளியே வந்தது.

    உடல் பகுதி

    உடல் பகுதி

    இதனால் குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து பொம்மியின் உடலில் மாட்டிக் கொண்ட குழந்தையின் உடல் பகுதியை செவிலியர்கள் போராடி எடுத்து மேல்சிகிச்சைக்காக பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    ஆரம்ப சுகாதார நிலையம் அதுவும் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என போர்டு வைத்துவிட்டு இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லை என்றால் எப்படி என உறவினர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அனுபவம் இல்லாத செவிலியர்கள் பிரசவம் பார்த்ததே குழந்தையின் தலை துண்டாக காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    இதையடுத்து இந்த சம்பவத்தை பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி விசாரித்தார். அவர் கூறுகையில் தாயின் வயிற்றில் இறந்த நிலையில் சிசு 2 நாட்கள் இருந்ததே தலை துண்டானதற்கு காரணம் என கூறியுள்ளார்.

    4 பேர் கொண்ட குழு

    4 பேர் கொண்ட குழு

    மேலும் குழந்தையின் தலை உடலுடன் பொருத்த பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும் குழந்தையின் தலை துண்டான விவகாரம் குறித்து விசாரணை நடத்த செங்கல்பட்டு பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் தலைமையில் 2 பெண் மருத்துவர்கள் உள்பட 4 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பபட்டுள்ளது என்றும் குழந்தைசாமி கூறினார்.

    English summary
    Directorate of Public Health and Preventive Medicine Dr Kolandaswamy explains how the baby's head cut off while delivery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X