சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் தனி ஒருவன்.. உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.. தெறிக்கவிட்ட பொன்.மாணிக்கவேல்!

டிஜிபியிடம் தன் மீது புகார் அளித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேல் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: டிஜிபியிடம் தன் மீது புகார் அளித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேல் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். சென்னையில் இன்று பேட்டியளித்த அவர் தன் மீது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார்.

தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கும் இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் நேற்றுதான் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.

சட்டத்திற்கு புறம்பாக பொன். மாணிக்கவேல் செயல்படுகிறார் என்று அந்த 13 போலீசாரும் புகார் அளித்தனர். இந்த நிலையில் இந்த புகார்களுக்கு எல்லாம் தற்போது பொன். மாணிக்கவேல் விளக்கம் அளித்துள்ளார்.

பாவம்

பாவம்

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.மாணிக்கவேல், என் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது. என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரும் நல்லவர்களே. என் மீது புகார் அளித்த 21 காவல் அதிகாரிகளும் ஒரு எப்.ஐ.ஆரை கூட இதுவரை பதிவு செய்யவில்லை. என் மீது குற்றச்சாட்டு கூறிய போலீசார், இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை.

யாரோ இருக்கிறார்கள்

யாரோ இருக்கிறார்கள்

என் மீது அளித்த புகாரின் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது. என் மீது புகார் அளித்தவர்களை சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள். யாரோ இவர்களை எல்லோரையும் இயக்குகிறார்கள். அவர்களை விரைவில் வெளியே சட்டத்திற்கு முன் கொண்டு வருவேன்.

ஆதாரம் தேவை

ஆதாரம் தேவை

சிலைத் தடுப்புப் பிரிவில் உள்ளவர்களைக் கொண்டு ஒரு சிலையை கூட மீட்கவில்லை. எல்லாம் நானாக பயன்படுத்திய அதிகாரிகள். சிறப்பு அதிகாரிகள் மட்டும்தான் எனக்கு உதவினார்கள். என் மீது ஆதாரமில்லாமல் புகார்களைத் தரக் கூடாது

தனியாள்

தனியாள்

மாவட்ட போலீஸாரை வைத்துத்தான் சிலைகளை மீட்டுள்ளேன்.எனக்கு உதவியவர்கள் மாவட்ட எஸ்பிக்கள், ஆயுதப்படை போலீஸார்தான்.தனி ஒருவனாக போராடி வருகிறேன். என் மீதான நடவடிக்கையை எதிர்த்து கோர்ட்டுக்குச் செல்வேன்.

முடியாது

முடியாது

பொதுமக்கள் வரிப்பணத்தில்தான் காவல்துறையினர் வருமானம் பெறுகிறார்கள். என் மீது அத்தனை எளிதாக அரசால் நடவடிக்கை எடுக்க முடியாது. கோர்ட் உத்தரவு இல்லாமல் என்னை விடுவிக்க முடியாது, என்று பொன். மாணிக்க வேல் கூறியுள்ளார்.

English summary
Tamilnadu government has no right to take action on me Chennai HC only has right to take action says Pon Manickavel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X