சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஆவின் பால் விலையை, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து வகையான ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ 6 உயர்த்தப்படும் என்று ஆவின் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamilnadu government hikes Aavin milk price by Rs 6 per litre

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நுகர்வோருக்கு தரமான பால் விற்பனையை உறுதி செய்வதற்காக விலை உயர்வை அமல்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பசும்பால், கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாய், எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாய் ஆக உயர்கிறது. எருமைப் பால் கொள்முதல் விலை, லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வால், 4.60 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அளித்துள்ள பேட்டி: ஐந்து வருடங்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் தற்போதுதான், பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தப்பட்டது போல தெரியும்.

ஆனால் சம்பளம் உயர்ந்துள்ளது, விலைவாசி உயர்வு போன்றவற்றை எல்லாம் கருத்தில் கொண்டால் இந்த விலை உயர்வு பெரிய விஷயம் கிடையாது. கொள்முதல் விலையை விட விற்பனை விலை லிட்டருக்கு 2 ரூபாய் அளவுக்கு அதிகமாக இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கொள்முதல் செய்ய கூடிய அனைத்து பாலும் விற்பனை ஆவது கிடையாது.

குறிப்பிட்ட அளவு பால், பவுடர்-ஆக மாற்றப்படுகிறது. இதனால் ஆவின் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, இந்த இரண்டு ரூபாய் வித்தியாசம் உள்ளது. ஆவின் நிர்வாகம் லாபத்தில்தான் இயங்கி வருகிறது. நஷ்டம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக பால் விலையை உயர்த்தி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்டை மாநிலமான, கர்நாடகாவில் அரசின் 'நந்தினி' பால் சில்லரை விலை லிட்டருக்கு ரூ.19 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu government hikes Aavin milk price by Rs 6 per litre. Standardised milk from Monday will be sold at Rs 41 per litre. The procurement price has also been increased by Rs 6 per litre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X