• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல் துறை மரியாதை.. தேர்தல் ஆணையம் அனுமதி

|

சென்னை: நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல் துறை சார்பில் இறுதி மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    நடிகர் Vivehk-ன் உடலுக்கு காவல் துறை மரியாதை

    Tamilnadu government is giving police respect for Viveks demise

    நடிகர் விவேக் மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய விவேக்கின் உடலுக்கு தமிழக அரசு மரியாதை கொடுக்க முடிவு செய்தது.

    Tamilnadu government is giving police respect for Viveks demise

    தமிழக சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையமும் அனுமதி கொடுத்தது. இதுகுறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் சின்னக் கலைவாணர் என அழைக்கப்படுபவரும் தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ் பெற்றவரும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றவரும் தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவரும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் கலை மற்றும் சமூகச் சேவையினை கவுரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின்போது காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.

     இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"

    English summary
    Tamilnadu Government is giving police respect for Vivek's demise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X