• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டி வசூலிக்க தமிழக அரசு தடை உத்தரவு

|

சென்னை: தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டி வசூலை நிறுத்த தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

  TN CM Edappadi Palanisamy speech | முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் உத்தரவும் இதர உத்தரவும் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக் கூடிய இடையூறுகளை தவிர்க்கவும், மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தலைமையில் இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

  குற்றவியல் நடவடிக்கைகள்

  பல கிராமங்களிலும் நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரி, வாராந்திர, மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில் இது போன்ற பண வசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

  சோஷியல் டிஸ்டன்சிங்

  சோஷியல் டிஸ்டன்சிங்

  பெரிய காய்கறி மார்க்கெட், சந்தை இருக்குமிடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் காய்கறி, பழ வகைகளை விற்கும் கடைகளை விசாலமான இடங்களில் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும். அப்போது Social distancing norms-இன்படி மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகைக் கடைகளிலும் மருந்து கடைகளிலும் காய்கறி கடைகளிலும் சமூக விலகல் முறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

  விழிப்புணர்வு

  விழிப்புணர்வு

  அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். இந்த நோய்த் தொற்று மிக மிகக் கடுமையானது என்பதையும் இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பதையும் இது மனித சமுதாயத்திற்கு ஒரு பேரழிவை ஏற்படுத்த வல்லது என்பதையும் மக்கள் உணரும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  மருந்து

  மருந்து

  இதனையும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் ஒலி பெருக்கி, தண்டோரா மூலம் பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் துண்டுப்பிரசுரம் மூலம் வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காசநோய், எச்ஐவி தொற்று உள்ளோர் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பெறுகின்றனர். அவர்களுக்கு இரு மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.

  சான்றிதழ்

  சான்றிதழ்

  அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்படும். இது தொடர்பான கோரிக்கைகள் இருப்பின் அவற்றிற்கான அத்தியாவசிய சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்குவார்கள்.

  அடையாள அட்டை

  அடையாள அட்டை

  மருத்துவ பொருட்களுக்கான சான்றிதழ்களை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், அரசு மருத்துவமனை முதல்வர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குநர்கள், பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குநர்கள் ஆகியோர் வழங்குவர். அத்தியாவசிய பொருட்களை நகர்வு செய்யும் தனியார் வாகனங்களுக்கும் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியார் பணியாளர்களுக்கும் சென்னை உள்பட அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேர்முக உதவியாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  அத்தியாவசிய பொருட்கள்

  அத்தியாவசிய பொருட்கள்

  மின் வணிக நிறுவனங்களான குரோஃபர்ஸ், அமேசான், பிக் பாஸ்கெட், பிளிப்கார்ட், டன்சோ போன்ற நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள், மருத்துவ பொருட்கள் எடுத்துச் செல்ல ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பொருட்களை மற்ற நிறுவனங்களும் அந்தந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைகளும் கூட்டுறவு விற்பனை அங்காடிகளும் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதிக்கப்படுகிறது.

  அடையாள அட்டை

  அடையாள அட்டை

  மருத்துவ பொருட்களுக்கான சான்றிதழ்களை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், அரசு மருத்துவமனை முதல்வர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குநர்கள், பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குநர்கள் ஆகியோர் வழங்குவர். அத்தியாவசிய பொருட்களை நகர்வு செய்யும் தனியார் வாகனங்களுக்கும் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியார் பணியாளர்களுக்கும் சென்னை உள்பட அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேர்முக உதவியாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  அத்தியாவசிய பொருட்கள்

  அத்தியாவசிய பொருட்கள்

  மின் வணிக நிறுவனங்களான குரோஃபர்ஸ், அமேசான், பிக் பாஸ்கெட், பிளிப்கார்ட், டன்சோ போன்ற நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள், மருத்துவ பொருட்கள் எடுத்துச் செல்ல ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பொருட்களை மற்ற நிறுவனங்களும் அந்தந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைகளும் கூட்டுறவு விற்பனை அங்காடிகளும் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதிக்கப்படுகிறது.

  உணவுகள்

  உணவுகள்

  சோமேட்டோ, ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கான தடை தொடரும். எனினும் மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர், தாங்களாகவே சமைக்க இயலாதோர் ஆகியோர் மெஸ் அல்லது சிறு சமையலகங்கள் மூலம் ஏற்கெனவே தங்கள் உணவுகளை பெற்று வருகிறார்கள்.

  அனுமதிச் சீட்டு

  அனுமதிச் சீட்டு

  இதற்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது. இத்தகைய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகன ஓட்டுநர்கள், அடையாள அட்டை வைத்திருப்பதை சம்பந்தப்பட்ட வாகனங்களில் அத்தியாவசிய சேவைக்காக என்று வில்லைகள் ஒட்டியிருப்பதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுசி செய்ய வேண்டும். அதே போன்று காய்கறி, பழங்கள், முட்டை போன்ற விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதிச் சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்.

  முதல்வர் அறிவிப்பு

  முதல்வர் அறிவிப்பு

  கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடைத் தீவனம் ஆகியவற்றின் நகர்வுகளும் அனுமதிக்கப்படுகிறது. இதில் சிரமங்கள் ஏதும் இருந்தால் காவல் துறை தலைமையக கட்டுப்பாட்டு அறையை கீழ்கண்ட எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்: 044- 28447701, 044- 2844 7703 என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

   
   
   
  English summary
  Tamilnadu government orders Private banks, small chit funds and self women groups should not ask interest for the people.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X