சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை

Google Oneindia Tamil News

Recommended Video

    Public holidays for 2020 announced | 2020-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் !

    சென்னை: 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறை தினங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    பொது(பல்வகை)த் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த ஆணைகள் இணைக்கப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிட்ட, விடுமுறை நாட்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்.

    தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும், பின்வரும் நாட்களில் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி 2020 ஆம் ஆண்டின் முதல் விடுமுறை தினம், ஜனவரி ஒன்றாம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதன்கிழமை வருகிறது.

    பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறதுபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது

    பொங்கல் லீவு

    பொங்கல் லீவு

    ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை பொங்கலை முன்னிட்டு விடுமுறை, 16ஆம் தேதி வியாழக்கிழமை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை உழவர் திருநாளை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம்

    ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம்

    ஜனவரி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம். ஜனவரி மாதம் இவ்வாறு அடுத்தடுத்து பல விடுமுறை தினங்கள் வந்த போதிலும், பிப்ரவரி மாதத்தில் எந்த ஒரு அரசு விடுமுறை தினமும் கிடையாது.

    தமிழ்ப் புத்தாண்டு

    தமிழ்ப் புத்தாண்டு

    மார்ச் 25 ஆம் தேதி புதன்கிழமை, தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிப்பு, என்பதால் விடுமுறை விடப்படுகிறது. இது புதன்கிழமை வருகிறது. ஏப்ரல் 6ம் தேதி திங்கட்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டும், 10ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளியை முன்னிட்டும், ஏப்ரல் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது.

    ரம்ஜான்

    ரம்ஜான்

    மே மாதம் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை, மே தினத்தை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படும். மே மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. இதை அடுத்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் எந்த ஒரு அரசு விடுமுறை தினமும் வரவில்லை.

    சுதந்திர தினம்

    சுதந்திர தினம்

    ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி சனிக்கிழமை பக்ரீத்தை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை மொகரம்

    ஞாயிற்றுக்கிழமை மொகரம்

    ஆகஸ்ட் 22ஆம் தேதி, சனிக்கிழமை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும், ஆகஸ்ட் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மொகரம் முன்னிட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜை

    ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜை

    இதையடுத்து அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக வருகிறது, அக்டோபர் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆயுத பூஜையை முன்னிட்டும், 26ம் தேதி திங்கள்கிழமை விஜயதசமியை முன்னிட்டும் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபியை முன்னிட்டும், விடுமுறை வழங்கப்படுகிறது.

    தீபாவளி

    தீபாவளி

    நவம்பர் 14ஆம் தேதி, சனிக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. டிசம்பர் 25ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது ஆக மொத்தம் 23 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu government has been announced public holidays for 2020 year, here is the list you can find it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X