சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரியர் மாணவர்களுக்கு தேர்வு வைக்க தயார்.. தமிழக அரசு அறிவிப்பு.. கலக்கத்தில் மாணவர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: அரியர் மாணவர்களுக்கு தேர்வு வைக்க தயார் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பு படித்து வரும் மாணவர்கள் வைத்திருந்த அரியர்கள் அனைத்தும் பாஸ் என்று என தமிழக அரசு அறிவித்தது. அதாவது இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முன்பு வைத்திருந்த அரியர் பாடங்களிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது,

இதற்கு கல்வியாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே தமிழக அரசின் முடிவை விமர்சித்திருந்தார்.
பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது என்று கூறினார். தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி பெற வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

துர்கா பூஜை இல்லை என்று அரசு சொன்னதா நிரூபிங்க 101 தோப்புக்கரணம் போடுகிறேன் - மம்தா பானர்ஜி துர்கா பூஜை இல்லை என்று அரசு சொன்னதா நிரூபிங்க 101 தோப்புக்கரணம் போடுகிறேன் - மம்தா பானர்ஜி

தொழில்நுட்ப கவுன்சில்

தொழில்நுட்ப கவுன்சில்

முன்னதாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியது.

நீதிமன்ற வழக்கு

நீதிமன்ற வழக்கு

இதற்கு தமிழக அரசு அளித்த பதிலில், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதாக கூறியது. எனினும் அரியர் விவகாரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளால் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தேர்ச்சி விவகாரம்

தேர்ச்சி விவகாரம்

இதையடுத்து அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய விவகாரம் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் தமிழக உயர்கல்வித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.

தேர்வு நடத்த தயார்

தேர்வு நடத்த தயார்

அப்போது தமிழக அரசு தரப்பில் அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை என்று வெளியான தகவல் தவறு என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரியரில் பாஸ் ஆன மாணவர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.

English summary
Tamilnadu government ready to conduct arrear exam for students after the meeting with All India Council of Technology. the Tamil Nadu government has a chance to withdraw the arrear pass given to the students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X