சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்... வியனரசு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : வியனரசு - வீடியோ

    சென்னை: தமிழகஅரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முடிவு எடுக்கவில்லைஎன்றால் தூத்துக்குடி மக்கள் முடிவெடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை மக்கள் நீதி கொற்றம் என்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு தெரிவித்தார்.

    சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.வியனரசு கூறியதாவது: 13 தமிழர்கள் படுகொலைக்கு பிறகு 28|5|2018 அன்று தமிழக அரசின் கண்துடைப்பு அரசாணை மூலம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    Tamilnadu government should take action against Sterlite: Viyanarasu

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் தங்களது கைக்கூலிகளை ஏவிவிட்டு, மக்களை மூளைச் சலவை செய்யும் நோக்கில் மாணவர்களுக்கு உதவுவது, கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் வரி வழங்குவது ,மருத்துவ உதவி செய்வது, கூலிக்கு ஆள் பிடித்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலையை திறக்க கோரி மனு கொடுப்பது போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக காவல் துறையிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் செய்தும் எந்த வகையான நடவடிக்கைகளையும்அவர்கள் எடுக்கவில்லை.

    வேதாந்தா குழுமம் நீதிமன்றங்களிலும் பசுமை தீர்ப்பாயங்களிலும் தவறான புள்ளி விவரங்களையும், போலி கையெழுத்து மனுக்களையும் கொடுத்து தற்போது தனக்கு சாதகமான தீர்ப்பு பெற்றுள்ளது. தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்.

    பசுமை தீர்ப்பாயம் அமைத்த நீதியரசர் தருண் அகர்வாலா தலைமையிலான சூழலியல் நிபுணர்களான சதீஷ் , சி.கர்கோட்டி,
    எச்,டி. வரலட்சுமி, உள்ளிட்ட குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையால் நீர் ,நிலம் ,சுற்றுச்சூழல் ,காற்று ,கடல் ,பேன்றவளங்கள் கெட்டுப்போய் உள்ளதா என்று மட்டுமே பற்றி ஆய்வு செய்து வந்தனர்.

    நீதியரசர் தருண் அகர்வால் தலைமையிலான அக்குழு வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலாவுக்கு சாதகமாக பரிந்துரை செய்திருப்பது வரம்பு மீறியதாகும்.

    ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக தூத்துக்குடி பொது மக்களிடம் பொது வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம்.

    இந்த வேண்டுகோளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு அளித்தார். மக்கள் உணர்வுகளுக்கு மாறான இந்த மக்கள் விரோத பரிந்துரையை மிகவும் கண்டிக்கதக்க ஒன்று.

    தமிழக அரசு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இயற்றியதை போல் கொள்கை அடிப்படையிலான அவசரத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இச்சட்டத்தின் மூலம் புதிய அரசாணை வெளியிட்டு நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலும் பிரித்து அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக அரசு இவ்வகையான நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்றால் தூத்துக்குடி மக்கள் அந்த புரட்சிகர பணியை செய்து முடிப்பதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது. இவ்வகையான கொள்கைகளை முன்னிறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் வரும்22 தேதி சென்னையிலும்.மற்றும் 23ம் தேதிகளில் சேலத்திலும் போராட்டம் நடத்தப் போகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    A.Viyanarasu said if Tamilnadu government is not taking any action against Sterlite, then people of Tuticorin will do.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X