சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சித்த மருத்துவர் தணிகாசலம் மீது அரசு நடவடிக்கை.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியவர்

Google Oneindia Tamil News

சென்னை: சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    போலி சித்த மருத்துவர் மீது நடவடிக்கை

    மேலும், கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதாக யாராவது போலி தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தணிகாச்சலம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதை பாருங்கள்.

    மெசேஜ் மூலம் உதவி கோரிய மாற்றுத்திறனாளி... வீடு தேடிச்சென்று நிவாரணப்பொருட்கள் வழங்கிய அன்பில் மகேஷ்மெசேஜ் மூலம் உதவி கோரிய மாற்றுத்திறனாளி... வீடு தேடிச்சென்று நிவாரணப்பொருட்கள் வழங்கிய அன்பில் மகேஷ்

    சமூக வலைத்தளம்

    சமூக வலைத்தளம்

    COVID-19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பொது சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவ இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரம் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் அனுமதி இன்றி தகவல் பரப்புதல் The Epedemic Diseases Act and Regulations பிரிவு 8-ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

    தணிகாச்சலம்

    தணிகாச்சலம்

    இந்நிலையில் மேற்கண்ட வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதாக மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை மூலம் தவறான செய்தியை பரப்பிவிட்டு வருகிறார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    பொது மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் அவர் செயல்பட்டு வருவதால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அவர்களால் சென்னை காவல்துறையிடன் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தவறான தகவல்

    தவறான தகவல்

    பெருந்தொற்று நோய் காலத்தில் தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று, அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், தணிகாச்சலம் வீடியோக்களை ஷேர் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.

    English summary
    Action has been taken against Thiruthanikachalam who says he is, invented medicine for coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X