சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஜா மாதிரி நிவர் புயல் பாதிப்பை ஏற்படுத்தாது.. மக்கள் பயப்பட வேண்டாம்.. சொல்கிறார் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் கஜா புயலை போல தமிழகத்தில் சேதங்களை ஏற்படுத்தாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள, காற்றழுத்த தாழ்வு மண்டலம், (நிவர் என்ற பெயரில்) புயலாக மாற உள்ளது. இது தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tamilnadu Government taking all measures to tackle cyclone Nivar

இதுகுறித்து சென்னையில் இன்று நிருபர்களுக்கு ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நிவர் புயலை எதிர்கொள்ள அரசு சார்பில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. கஜாபுயல் காலத்தைப் போல மிக மோசமானதாக இந்த புயல் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Government taking all measures to tackle cyclone Nivar

இருப்பினும், தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும், மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது, இதையெல்லாம் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் இது தவிர உரிய முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிவர்.. 117 கி.மீ வேகத்தில் தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு.. சென்னையில் மிக கன மழை பெய்யும்நிவர்.. 117 கி.மீ வேகத்தில் தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு.. சென்னையில் மிக கன மழை பெய்யும்

கடலுக்கு ஏற்கனவே சென்ற மீனவர்கள் உடனடியாக திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.

English summary
Cyclone Nivar will not damage Tamilnadu as like as cyclone Gaja in the past says minister Jayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X