சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா.. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 251738 ஆக உயர்ந்துள்ளது.

After too many people get Coronavirus in Governor House, TN Governor Purohit checks up in the hospital

தமிழகத்தில் ஆளுநர் மாளிகையில் வேகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆளுநர் மாளிகையில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் நேற்றும் நேற்று முதல் நாளும் மேலும் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கொரோனா இறப்பு சதவீதம் குறைந்தது- வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு அனுமதி: மத்திய அரசுகொரோனா இறப்பு சதவீதம் குறைந்தது- வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு அனுமதி: மத்திய அரசு

தமிழக ஆளுநர் மாளிகையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் இந்த முடிவை எடுத்து இருந்தார்.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் வரிசையாக பலருக்கு கொரோனா ஏற்பட்டதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    Amit Shah gets positive for Coronavirus

    இதையடுத்து அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    After too many people get Coronavirus in Governor House, TN Governor Purohit checks up in the hospital today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X