சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் முழுவதும் 2-வது நாளாக பஸ் ஸ்டிரைக்.. பொதுமக்கள் கடும் அவதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த அளவில் பேருந்துக்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Recommended Video

    சென்னை: 2ம் நாள் பேருந்துகள் இல்லை.. மக்கள் தொல்லை… ஆட்டோக்களில் அலைமோதும் கூட்டம்!

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் இந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்து நேற்று முதல் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

    tamilnadu govt bus strike continue 2nd day : people worry

    அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் தமிழக அரசு பணிமனையில் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை இறுதி செய்ய வலியுறுத்தி இன்று இராண்டாம் நாளகாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பஸ் ஸ்டிரைக்.. இனி போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு பஸ் ஸ்டிரைக்.. இனி போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு

    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பேச்சுவார்த்தைக்கு இதுவரை அரசு அழைக்காத நிலையில், பஸ் ஸ்டிரைக் தொடரும் என்றும், இனி போராட்டம் தீவிரப் படுத்தப்படும் என்றும் சி.ஐ.டி.யு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 1000 ரூபாய் இடைக்கால நிவாரணம் எங்களுக்கு போதுமானதாக இல்லை. 1.9.2019 அன்றே 14வது ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்று அரசு சொல்ல வேண்டும். அரசு பேருந்துக்கு பதில் பள்ளி பேருந்துகளை பயன்படுத்தகூடாது. பள்ளி வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை அரசு பேருந்துகளுக்கு பயன்படுத்த கூடாது என்று கூறினார்.

    English summary
    Government bus workers across Tamil Nadu have been on strike for the second day. The public has suffered due to the low number of buses operating.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X