சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்தாலும், பழுதுபட்டுள்ள தமிழக அரசை இயக்க முடியாது: கமல்ஹாசன் கருத்து

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதாகியுள்ள தமிழக அரசை சரி செய்ய முடியாது என மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தற்போது நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மறு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைக்கிறோம் என்ற பெயரில், சீலிடப்பட்டுள்ள ஓட்டு மெஷின்கள் உள்ள அறைகளை திறக்க கூடாது.

Tamilnadu govt is repaired: Kamal

மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் கமிஷன் நடுநிலையோடு செயல்படவேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

என்ன அலட்சியம்.. வடஇந்தியர்களை குவித்ததால் வந்த விளைவு.. மதுரையில் நேருக்கு நேர் மோத வந்த ரயில்கள்! என்ன அலட்சியம்.. வடஇந்தியர்களை குவித்ததால் வந்த விளைவு.. மதுரையில் நேருக்கு நேர் மோத வந்த ரயில்கள்!

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் நோயாளிகள் இறந்த புகார் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் மதுரையில் பேட்டரி பழுது, ஜெனரேட்டர் இல்லாததால் மின் தடை ஏற்பட்டு உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளது, இந்த அரசே பழுதுபட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது.

டெல்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும், பழுதுபட்டுள்ள தமிழக அரசை இயக்க முடியாது. எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய தமிழக அரசின் நிலையாக உள்ளது. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

English summary
Makkal Needhi Maiyam leader Kamal haasan has said that the govt is repaired.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X