சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெரினாவில் ரூ.35 கோடி செலவில் அமையும் கலைஞர் நினைவிடம்.. தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியீடு

Google Oneindia Tamil News

சென்னை: மெரினாவில் ரூ.35 கோடி மதிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இதற்கான டெண்டர் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 13 முறை சட்டசபை உறுப்பினராகவும் 5 முறை முதல்வராகவும் இருந்தவர் கருணாநிதி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் சுமார் 39 ஆண்டுகளாக இருந்தவர்.

Tamilnadu govt issued tender notice for Karunanidhi memorial in Marina

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வயது மூப்பு காரணமாகக் கருணாநிதி காலமானர். பெரும் சட்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது உடல் மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது,

இதனிடையே நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கருணாநிதி நினைவிடம் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கருணாநிதி என்று புகழாரம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின், 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை, 70 ஆண்டுகள் பத்திரிக்கையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுக் கால திமுக தலைவராக இருந்தவர் கருணாநிதி என்றும் குறிப்பிட்டார்.

மேலும் சென்னை மெரினா காமராஜர் சாலையில் 2.21 ஏக்கரில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நினைவிடம் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஔி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கான அரசாணையும் இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்தச் சூழலில் ரூ.35 கோடியில் 'கலைஞர் நினைவிடம்' அமைக்க டெண்டர் அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 28ம் தேதி வரை கலைஞர் நினைவிடத்துக்கான டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Karunanidhi memorial tender notice latest. Marina Karunanidhi memorial latest update in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X